india

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர் போராட்டம்

புதுதில்லி, டிச.15- இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய நிலையில், எதிர்க்  கட்சிகளின் தொடர் கிளர்ச்சி காரண மாக இரு அவைகளும் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வின் “பாஸ்” உதவியுடன் புதனன்று நாடாளுமன்ற மக்களவையில் நுழைந்த இருவர் வண்ண புகைக் குப்பிகளை வீசினர். இதுதொடர்பாக பெண் உட்பட 7 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், வியாழனன்று பாது காப்புக் குறைபாடு விவகாரத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்; தார்மீக  அடிப்படையில், அவர் அமைச்சர் பத வியை ராஜினாமா செய்ய வேண்டும்  என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை  முன் வைத்து, நாடாளுமன்றத்தின் இரு  அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் குரலெழுப்பி போராடிய நிலை யில், விவாதம் நடத்துவதற்கு தயாராக  இல்லாத ஒன்றிய பாஜக அரசு, நாடா ளுமன்றத்திற்கு பாதுகாப்பு அளிக்க முடியாத தங்களின் தோல்வியை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கும் முயற்சியில் ஈடு பட்டு, மாநிலங்களவையில் ஒருவர்,  மக்களவையில் 13 பேர் என மொத்தம்  14 எதிர்க்கட்சி எம்பிகளை கூட்டத்  தொடர் முழுவதும் நாடாளுமன்றத் திற்கே வரமுடியாதபடி இடைநீக்கம் செய்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
இந்நிலையில், இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வாயில் மற்றும் நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்  டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களும் பங்கேற்றனர். போராட் டத்தின் பொழுது கைகளில் பதாகை களை ஏந்தி எதிர்க்கட்சி எம்பி.,க்கள் முழக்கங்களை எழுப்பினர். காங்கி ரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி யும் போராட்டத்தில் பங்கேற்றார். அதன்  பின் சோனியா காந்தி இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களுடன் ஆலோ சனை நடத்தினார். 

டிசம்பர் 18 வரை ஒத்திவைப்பு
வெள்ளியன்று காலை மக்களவை, மாநிலங்களவை கூடியதும் நாடாளு மன்ற பாதுகாப்பு குறைபாடு மற்றும் இடைநீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு அவை நடவடிக்கை களும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்  கப்பட்ட நிலையில், மீண்டும் 2 மணிக்கு  இரு அவைகளும் கூடின. அப்போதும்  எதிர்க்கட்சி எம்பி.க்களின் போராட்  டம் நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் திங்கள் கிழமை (டிசம்பர் 18) வரை ஒத்தி வைக்கப்பட்டது.

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால்...
இடைநீக்கம் செய்யப்பட்ட வர்களில் ஒருவரான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், “எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால் இந்நேரம்..  தேசத் துரோகிகளாக! பாகிஸ்தான் கைக்கூலிகளாக! அர்பன் நக்சல்  களாக! காலிஸ்தான் ஆதரவாளர் களாக ஆக்கப்பட்டு உயர்மட்ட விசா ரணையில் இருந்திருப்போம். பாஸ்  வழங்கியது ஆளுங்கட்சி உறுப்பின ராதலால் நாங்கள் காந்தி சிலை முன்னால் போராடும் இடைநீக்கப்பட்ட உறுப்பினர்களாகியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.