india

img

பாஜகவிற்கு எல்லாம் தெரியும் என்றால் மோடி ஏன் பிரஜ்வல்லுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்?

பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியும் என்றும், இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா வுக்கு கடிதம் எழுதியதாகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மைசூரு பிரச்சாரத்தின் போது இந்த விஷயத்தை கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஹாசனைச் சேர்ந்த பாஜக தலைவர் தேவராஜ் கவுடா கூறியுள்ளார். இந்த கூற்றின்படி பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் அமித் ஷாவிற்கு தெரியும் என்றால்,மோடியின் காதுக்கு செல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படி ஒரு சூழலில் பிரதமர் மோடி 2 வாரத்திற்கு முன்பு கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆதரவாகவும், அவரைப் பாராட்டியும் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கே வாய் திறக்காத பிரதமர் மோடி, கூட்டணி கட்சியின் பாலியல் வன்முறை சம்பவங்களையா கண்டுகொள்ளப் போகிறார்? என சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.