india

img

தலித் மக்களின் நிலத்தை அபகரித்த பாஜக தேசிய துணைத்தலைவர்.... அதிகாரத்தை வைத்து மிரட்டி பினாமி மூலம் 7.3 ஏக்கரை எழுதி வாங்கினார்...

கவுகாத்தி:
பாஜக-வின் தேசியத் துணைத் தலைவராக இருக்கும் பைஜயந்த் பாண்டா, ஒடிசாவில் தலித் மக்களின் 7.3 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பைஜயந்த் பாண்டா மற்றும் அவரது மனைவிஜாகி மங்கத் பாண்டா ஆகியோரை கைது செய்வதற்கு ஒடிசா உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.ஒடிசாவைச் சேர்ந்தவர் பைஜயந்த் பாண்டா (56). பாஜக-வின் தேசிய துணைத்தலைவராக இருக்கிறார். இவர் தனது மனைவிஜாகி மங்கத் பாண்டா-வுடன் இணைந்து, ‘ஒடிசா ‘இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட்’(Odisha Infratech Pvt Ltd - OIPL) என்றரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் 90 சதவிகித பங்குகள், பைஜயந்த் பாண்டா மற்றும் அவரது மனைவி ஜாகி மங்கத் பாண்டாவுக்கு உள்ளது.

இந்நிலையில்தான், 2010 முதல் 2013வரை ஒடிசா-வின் குர்தா மாவட்டத்தைச்சேர்ந்த 22 தலித் நில உரிமையாளர்களிடமிருந்து, 7.294 ஏக்கர் நிலத்தை பாண்டாவின்‘ஓஐபிஎல்’ நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.பைஜயந்த் பாண்டா இதனை நேரடியாக செய்யவில்லை. தான் நடத்தும் மற் றொரு நிறுவனமான ‘ஆர்டெல்’ ( ORTEL Communication Ltd.) நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்த ரபீந்திரகுமார் சேத்தி என்பவரைப் பயன்படுத்தி, பினாமி சொத்து அடிப்படையில் நிலத்தை வாங்கி, பின்னர் ‘ஓஐபிஎல்’ நிறுவனத்திற்குச் சொந்தமாக்கியுள்ளார்.பொதுவாக தலித்துக்களின் நிலத்தைமற்றவர்களுக்கு விற்க முடியாது என்பதால்,யாரும் வாங்கவும் முடியாது என்ற நிலையில், பாஜக தேசிய துணைத்தலைவர் பைஜயந்த் பாண்டா தலித் மக்களை மிரட்டி,தனது ஓட்டுநர் பெயரில் நிலத்தை மிரட்டிவாங்கியிருப்பதுதான் குற்றச்சாட்டு. அதுமட்டுமன்றி, சந்தை மதிப்பில் பாதித் தொகையையே விலையாகக் கொடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 31-அன்று பொருளாதார குற்றப் பிரிவு (EOW)போலீசாரிடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.பைஜயந்த் ஜாய் பாண்டா, அவரது மனைவி ஜாகி மங்கத் பாண்டா ஆகியோர் சொல்லித்தான் தலித் உரிமையாளர்களை மிரட்டி 7 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை அபகரித்ததாகவும், மற்றபடி தனக்கும் அந்தநிலத்திற்கு சம்பந்தம் இல்லை என்று ஓட்டுநர் சேத்தி வாக்குமூலம் அளித்துள்ளார். தலித் மக்களின் நிலத்தையொட்டி, மற்றவர்களுக்கு நிலம் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு தங்கள் நிலத்தில் ஒரு பகுதியை தலித் மக்கள் விற்கலாம் என்று ஒரு விதிஇருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகையில், ஓட்டுநர் ரபீந்திர குமார் சேத்தியின் முன்னோர்களுக்கு தலித் மக்களின் நிலத்தையொட்டி, நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பாஜக தலைவர் பைஜயந்த் பாண்டா பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பைஜயந்த் பாண்டாவின் ‘ஓஐபிஎல்’ நிறுவனத்தின் இயக்குநர் மனோரஞ்சன் சாரங்கி மற்றும் சிபா பிரசாத் ஸ்ரீச்சந்தன்ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களும் “பைஜயந்த் பாண்டா மற்றும் அவரது மனைவி ஜாகி மங்கத் பாண்டா கூறியபடியே அனைத்து முடிவுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன” என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசாரும் இந்த மூன்றுபேரின் வாக்குமூலங்களில் உண்மை இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதாவது, சேத்திதான் 7 ஏக்கர் நிலத்தைதலித் மக்களிடம் இருந்து வாங்கியுள்ளார். ஆனால், சேத்தியோ மாதத்திற்கு ரூ. 8 ஆயிரம் மட்டுமே சம்பாதிப்பவர். ஆனால் இந்தநிலம் வாங்கியதில் லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். ஆனால், சேத்திக்கும் நிலத்தை வழங்கிய மக்களுக்கும் இடையே எந்தவிதமான நிதி பரிவர்த்தனையும் இல்லை. நிலம் வாங்குவதற்காக பாஜக தலைவர் பைஜயந்த் பாண்டாவும், சேத்திக்கு பணம் எதுவும் செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது, ஒடிசா நிலச் சீர்திருத்த சட்டம்,நில வருவாய்ச் சட்டம், பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டம் மற்றும் வருமானவரி சட்டம், எஸ்சி - எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், பாஜக தலைவர் பைஜயந்த் பாண்டா மற்றும்அவரது மனைவி ஜாகி மங்கத் பாண்டா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது நடவடிக்கைக்கும் அவர்கள் தயாராகினர். ஆனால், பைஜயந்த் பாண்டாவும், அவரது மனைவியும் ஒடிசா உயர் நீதிமன்றத்தை அணுகி கைதுக்கு தடை பெற்றனர்.இதனிடையே, ஒடிசா உயர்நீதிமன்றமே கைதுக்கான தடையை தற்போது விலக்கிக்கொண்டுள்ளது.