india

img

வாக்கு திருட்டு - மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்

பாஜக – தேர்தல் ஆணையம் நடத்திய “வாக்கு திருட்டு” குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மொத்தம் 5 விதமாக இந்த வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.  இது தொடர்பான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் “வாக்கு திருட்டு” குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானத்தை சு.வெங்கடேசன் எம்.பி தாக்கல் செய்துள்ளார்.