india

img

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு 2025-ஆம் ஆண்டுக்குள் சாத்தியமில்லை

2025-க்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் இலக்கை இந்தியா அடையாது. இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, ‘குழந்தைத் தொழிலாளர்கள் மீதான தேசியக் கொள்கை’ குறித்த  52-ஆவது அறிக்கையை வெளி யிட்டுள்ளது. அதில் 2025-ஆம்  ஆண்டுக்குள் குழந்தைத் தொழி லாளர் முறையை ஒழிப்பதற்கான சர்வதேச உறுதிப்பாட்டை நிறை வேற்றுவது “நடைமுறையில் சாத்தியமில்லை” என்று கூறியுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பதற்கான சர்வதேச உறுதிப்பாட்டை நிறைவேற்றுவது “நடைமுறையில் சாத்தியமில்லை” என்ற முடிவுக்கு வருவதற்கு, அது  தற்போது பணியாற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை யை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1.01 கோடி குழந்தைகள் பல்வேறு துறைகளில் வேலை செய்து கொண்டிருப்பதாக ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விவசாயம், சுரங்கம் உள்ளிட்ட எட்டுத் தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 57,54,201 பேர் பணியாற்றுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களை அரசு மற்றும் தன்னார்வலர்கள் கண்டறிந்து மீட்டாலும் அந்தக் குழந்தைகள் மீண்டும் அதே வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளை பணியில் அமர்த்துபவர்களுக்கு தண்டனை கள் வழங்கப்பட்டாலும் இதில் எந்த மாற்றத்தையும் காணமுடிய வில்லை. பணிக்கு அமர்த்து பவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தண்டனைகளை கடுமை யாக்குவதோடு அபராதத்தை மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.

பர்த்ருஹரி மஹ்தாப் தலைமை யிலான குழு, 2025-ஆம் ஆண்டுக் குள் கட்டாயத் தொழிலாளர்கள், ஆள் கடத்தல், குழந்தைத் தொழி லாளர் முறையை ஒழிக்க அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  தனது அறிக்கை யில் கூறியுள்ளது. 

“பர்த்ருஹரி மஹ்தாப் தலைமை யிலான குழு தனது அறிக்கையில், கட்டாய உழைப்பை ஒழிக்க அர சாங்கம் பயனுள்ள நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. மனித கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டுமென்கிறது”

கடந்த ஆறு ஆண்டுகளில் மீட்கப்பட்ட மற்றும் மறுவாழ்வு பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை
2017-18     47,635    
2018-19     50,284 
2019-20     54,894
2020-21     58,289
2021-22     18,137  
2022-23     13,761