புதுதில்லி,பிப்.20- தில்லியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தில்லி ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
கும்பமேளாவிற்குச் செல்லும் வழியில் உள்ள தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தின் விசாரணையில், ஒரு பெட்டியில் எத்தனை பயணிகள் பயணிக்கலாம் என்பதற்கு வரையறைகள் இருந்தால், ஏன் அதைவிட அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர் எனத் தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சட்டப்பூர்வமான விதிகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தாலே நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.