india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்க மத்திய, மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

                                         ******************

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள் ளது.

                                         ******************

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.

                                         ******************

பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன்பத்திரங்களின் மூலம்ரூ. 2,500 கோடியை திரட்டியுள்ளது.

                                         ******************

போலியான வகையில் டிஆர்பி ரேட்டிங்கை (தொலைக்காட்சி தர புள்ளி) அதிகரிக்க நடந்த மோசடி தொடர்பான வழக்கில் மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

                                         ******************

குழந்தைகளுக்கு அணிவிக்கப் டும் டயபரில் (அணையாடை) பிதலேட் என்ற ரசாயனம் கலந்துள்ளதாக டாக்சிக்ஸ் லிங்க் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

                                         ******************

இந்திய வங்கித் துறையில் அடுத்த 18 மாதங்களில் வராக் கடன் அளவு கணிசமாக அதிகரிக்கும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் ரூபி  தெரிவித்துள்ளது.

                                         ******************

பங்குகளை கையகப்படுத்திய வகையில் ஜியோ பிளாட்பா ர்ம்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ. 33,737 கோடியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

                                         ******************

ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகும் படங்கள் வெளியாகும்போது டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும். தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். 

                                         ******************

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணைக்கு  எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

                                         ******************

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 1800 பேர் ஆந்திராவில் கரை சேர்ந்தனர். நெல்லூர் கிருஷ்ணாம்பேட்டை துறைமுகத்தில் பாதுகாப்பாக ஆந்திர அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

                                         ******************

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று தில்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

                                         ******************

இந்திய விமானப்படையால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 400 கி.மீ. இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

                                         ******************

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசின் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது.

;