india

img

தில்லியில் விவசாயிகள் எழுச்சிக் கோலம்...

மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26-27 தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மாபெரும் தொழிலாளர் - விவசாயிகள் போராட்டத்தினையொட்டி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தில்லியை நோக்கி ஆயிரமாயிரமாய் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலை ஏற்று அணிதிரண்டார்கள். அவர்களை தில்லிக்குள் நுழையவிடாதவாறு அடக்குமுறையை ஏவி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, உத்தரப்பிரதேச பாஜக அரசும், தில்லி காவல்துறையை கையில் வைத்துள்ள மோடி அரசும் அட்டூழியத்தின் உச்சத்திற்கு சென்றன. இதை எதிர்த்து நவம்பர் 27 வெள்ளியன்று தில்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் - சிஐடியு - விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் எழுச்சிமிகு பேரணியை நடத்தினர். தில்லியைச் சுற்றிலும் குவிந்திருந்த விவசாயிகளும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி விவசாயிகளை தில்லிக்குள் நுழைய மோடி அரசு அனுமதி அளித்தது. (விரிவான செய்தி 8)