india

img

தில்லியில் 66 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு

தில்லியில் 66 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தில்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழையை பெய்துள்ளது.  நடப்பு அக்டோபர் மாதம் மட்டும் 128.3 மி.மீ மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 66 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பதிவான ஒன்றாகும். கடந்த 1954-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகபட்சமாக 238.2 மி.மீ மழை பொழிந்துள்ளது.

இதன்மூலம் நான்காவது அதிகபட்ச மழைப்பொழிவு நடப்பு அக்டோபர் மாதம் பதிவாகியுள்ளது. தில்லியில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 122.5 மி.மீ மழை பொழிதுள்ளது. தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 790 மி.மீ மழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக செப்டம்பர் மாதம் 125.1மி.மீ மழை பொழியும் நிலையில் நடப்பாண்டு வழக்கத்திற்கு அதிகமாக 164.5 மி.மீ மழை பொழிந்துள்ளது.

;