தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளு பேத்தியான விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.தற்போது குமாரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், அதற்கு காங்கிரஸ் கட்சி மறுத்ததாகவும் கூறப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே இவர் கட்சி மாறப் போகிறார் என்பதாகத் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், இன்று விஜயதாரணி தன்னை பாஜகவின் இணைத்துக்கொண்டுள்ளார்.