லக்னோ:
பிரதமர் நரேந்திரமோடி, வாரணாசி தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில், அங்குள்ள பேல்பூர் காவல் நிலையத் துக்கு உட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் அலுவலகம் வைத்துள்ளார். ஜனசம்பார்க் கார்யாலயா (மக்கள் தொடர்பு அலுவலகம்) எனப்படும் இங்கு பிரதமர் மோடி வந்துபோவதில்லை என்றாலும் பெயரளவில் அலுவலகம் இயங்கி வருகிறது.இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த ‘ஜனசம்பார்க் கார்யாலயா’ விற்பனைக்கு இருப்பதாக ஆன்லைன் வர்த்தகத்திற்கான ஓ.எல்.எக்ஸ். (OLX) தளத்தில் வெளியான விளம் பரம் பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
விளம்பர பதிவு எண் 1612346492 யின் படி, ஹவுஸ் & வில்லா’என்ற வீடு சார்ந்த பதிவுகளின் கீழ், “6,500 சதுர அடி பரப்பளவு கொண்ட குளியலறைகளுடன் கூடிய 4 அறைகள் கொண்ட வில்லா விற்பனைக்கு” என பதிவிடப்பட்டு உள்ளது.மேலும் இதன் விலை 7.50 கோடி என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக-வினர் அளித்த புகாரின்பேரில் தற்போது லட்சுமிகாந்த் ஓஜா உள்ளிட்ட 4 பேரை போலீசார்கைது செய்துள்ளனர். மோடி திறந்துவைத்த, 182 மீட்டர் படேல் சிலையும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்கும் என்றுஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.