headlines

img

இதுதான் மோடியிசம்

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரும் என்பதற்கான நம்பிக்கையளிக்கும் அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ள நிலையில், மோடியிடம் பதற்றமும், தடுமாற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக அவர் தனது அறியாமையை மேலும் மேலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். குறைந்தபட்ச பொது அறிவும், நேர்மையும் இல்லாத ஒருவர் கடந்த ஐந்தாண்டுகளாக நாட்டின் பிரதமராக காலம் கடத்தியது குறித்து இந்திய மக்கள் வெட்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பிரதமர் மோடி அடுத்தடுத்து வீசும் குண்டுகள் சமூக வலைதளங்களில் புழங்குவோருக்கு மிகப் பெரிய திருவிழாவாக மாறியிருக்கிறது. பாலாகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் தொடுப்பதற்கு நாள் குறித்தது நான்தான் என்றும், மேக மூட்டமாக இருப்பதால் ரேடார் கண்காணிப்பில் படாமல் போர் விமானங்கள் செல்ல உதவியாக இருக்கும் என்று தான் கூறியதாகவும் மோடி தெரிவித்தார். மேகங்களையும்ஊடுருவி கண்காணிக்கும் பணியை ரேடார்கள்செய்யும் என்பது குறைந்தபட்ச அறிவியல்அறிவு கொண்டவர்க்கு கூட தெரியும்.

தன்னைப் பற்றிய மிகை மதிப்பீடும், தன்னகங்காரமும் கொண்ட மோடி தன்னை மிகப்பெரிய போர்க்கலை நிபுணராக சித்தரிக்கமுயன்று அனைவரது கேலிக்கும் உள்ளானார்.எனினும் அவர் அசரவில்லை. 1987-88 காலகட்டத்திலேயே டிஜிட்டல் கேமிரா மற்றும்இமெயில் வசதியைப் பெற்றிருந்த மிக சிலநபர்களில் நானும் ஒருவன் என்று கூறியஅவர் டிஜிட்டல் கேமராவில் எடுத்துஇமெயில் மூலமாக தாம் அனுப்பிய புகைப்படத்தைக் கண்டு அத்வானியே அசந்துவிட்டார்என்று மோடி ஒரு போடு போட்டார். இந்த இரு வசதிகளும் இந்தியாவுக்கு வராத காலத்தில்அதைத்தான் பயன்படுத்தியதாக மோடி அளந்துவிட்டதைக் கண்டு அத்வானியே உண்மையில்அசந்துதான் போயிருப்பார்.

கடந்த ஐந்தாண்டு காலம் மக்களுக்கு செய்தசேவையை கூறி, வாக்கு கேட்க வகையில்லாத மோடி கொஞ்சம் கொஞ்சமாக காலத்தை பின் நகர்த்தி காங்கிரசை குற்றம் சாட்டுவதையே தன்னுடைய பரப்புரை பாணியாக மாற்றினார். அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.போபால் விஷவாயு கசிவு குறித்து பேசும் இவர் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து பேசமறுக்கிறார். சீக்கியர்களுக்கெதிரான கலவரம்குறித்து பேசும் இவர், குஜராத்தில் தாம்முதல்வராக இருந்தபோது, நடந்த மிகப்பெரிய படுகொலையை பேச மறுக்கிறார். போபர்ஸ் ஊழல் குறித்து பேசுபவர் ரபேல் ஊழல் குறித்துமறந்தும் வாய்திறப்பதில்லை. மொத்தத்தில் இந்திய மக்கள் முன்பு மோடிமுற்றிலும் அம்பலப்பட்டு நிற்கிறார். “விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது” என்ற திரைப்பட பாடல் வரிகள் மோடிக்கு முற்றிலும் பொருந்தும். 

;