headlines

img

பள்ளிக் குழந்தைகளின் உணவிலும் மதவெறி நஞ்சு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 24 பள்ளி களில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட இஸ்கான் என்ற இந்து மதவெறி அமைப்பு காலை உணவு வழங்க தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20ஆயிரம் சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35ஆயிரம் சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு தமிழக அரசு வழங்கியி ருக்கிறது. மேலும் உணவு சமைப்பதற்கான மின்கட்டணம், தண்ணீர் கட்டணம் முழு வதையும்  அரசே செலுத்தும் என முதல்வர் அறி வித்திருக்கிறார். இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு திட்டத்தில் ஒரு அமைப்பை செயல்பட அனுமதிக்கும் போது அதற்கென்று இருக்கும் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இத்திட்டம் குறித்து  எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடவில்லை. மற்ற அமைப்புகள் விண் ணப்பிக்க எந்த முகாந்தரமும் கொடுக்கவில்லை. இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்திருப்பது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.  மாணவர் களுக்கு உணவு வழங்குவது இங்கு பிரச்சனை யில்லை. ஆனால் யார் வழங்குகிறார்கள், அவர்க ளின் நோக்கம் என்ன என்பதுதான் பிரச்சனை. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பி டம் ஒப்படைத்து இருப்பதுதான் சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு,  2013ல்  இதே இஸ்கான் நிறுவனம்  வழங்கி வரும் உணவு குறித்து ஆய்வு செய்து பல்வேறு குற்றச் சாட்டுகளை கூறியிருக்கிறது. ஏன், சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் அரசின் நிதியை பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு முட்டை போட முடி யாது என இந்நிறுவனம் மறுத்து விட்டது. அதே போல் கர்நாடக மாநிலத்தில் மாணவர்களுக்கு கொடுக்கும் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க முடியாது என மறுத்திருக்கிறது.

இந்த அமைப்பின் நோக்கம் உணவு வழங்குவ தல்ல, மாறாக  மநு(அ)தர்ம வழியில் உணவிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்குவது தான்.  சமீபத்தில் கோவையில் உள்ள மாநக ராட்சி பள்ளிகளில் அசைவம் உண்பது பாவம்; சைவம் சாப்பிடுவது புண்ணியம் என்று அரசின் ஒத்துழைப்போடு பிரச்சாரம் மேற்கொண்டனர். கடும் எதிர்ப்பு வந்தவுடன் தற்காலிகமாக இந்த பிரச்சாரம்  நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது இஸ்கான் நிறுவனம், நேரடியாக  உணவின் மூலம் பள்ளிகளில் ஊடுருவியிருக்கிறது. தமிழகத்தில் 97.65 சதவிகித மக்கள் அசைவம் சாப்பிடுப வர்கள். அதனை மாற்றி தமிழகத்தின் உணவு முறையையே சுவாகா செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு மறைமுகமாக முயல்கிறது. அதற்கு தமிழகத்தில் அதிமுக அரசு துணைபோயிருப்பது வெட்கக்கேடு. உடேன  இஸ்கான் அமைப்பிற்கு கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 

 

;