headlines

img

ஆயுஷ்மான் யாருக்கு?

பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஞாயிறன்று மராத்தி நடிகை பூஜா என்பவர் குழந்தைப் பேறின்போது உடல்நலம் குன்றியதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.  ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. நடிகை பூஜாவின் இறப்புக்கு அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தேடியலைந்து காலம் கடந்த பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றது முக்கிய காரணமாகும்.108 ஆம்புலன்ஸ் சேவை உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. அங்கு ஏர் ஆம்புலன்ஸ் வசதி கூட உள்ளது. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கான ஆம்புலன்ஸ் வசதியை அதிகப்படுத்துவதற்கு அந்த அரசு முயற்சி எடுக்காததே இந்த மர ணத்திற்கு காரணமாகும். எப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் வசதிக்காக அன்றி ஏழை, எளியவர்களின் நலன்களை ஆளும் பாஜக அரசு மனதில் கொள்கிறதோ, அப்போதுதான் இத்த கைய மரணங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

மகப்பேறு கால மரணங்கள் இன்னும் நாட்டில் அதிகளவில் நடந்து கொண்டிருப்பது கவலைக்குரியது. அதுவும் 21ஆம் நூற்றாண்டில் தொடர்வது நல்லதல்ல. மிகப்பெரிய பொரு ளாதார சக்தியாக இந்தியா வளர்ந்து கொண்டி ருக்கிறது என்று பீற்றிக்கொள்ளும் ஆட்சியா ளர்கள் பெருமைப்படத்தக்க நிகழ்வல்ல இது.  

நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம், அவசர கால சிகிச்சை ஆகியவற்று க்கு பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. 

இந்தியாவில் 28,863 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றுடன் துணை  ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஏராளமாக உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் மகப்பேறு மருத்துவம்தான் நடை பெறுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கான கண்கா ணிப்பு நடவடிக்கைகளும் அவற்றால் மேற் கொள்ளப்படுகின்றன. இதனால் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.  ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ முந்தைய காங்கிரசின்  அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பெயர்களை மாற்று வதையும், புதிய திட்டம் போல் அறிவிப்பதை யுமே செய்து விளம்பரம் தேடிக் கொள்வ திலேயே கவனமாயிருக்கிறது. அத்துடன் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவத்துறையில் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) எனும் அலங்கார பெய ருடன் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் ஏழை, எளிய வர்களுக்கு பயன்படுவதை விட கார்ப்பரேட் மருத்துவமனை நடத்துபவர்களுக்கே பயன்படு கிறது. அவர்களுக்கு அரசு நிதி போய்ச் சேரும் வகையிலேயே இந்தத் திட்டம் அமைந்தி ருக்கிறது. இதில் மாற்றம் நிகழ வேண்டும்.

;