headlines

img

அமித்ஷாவின் அளப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மைக் காலமாக பல்கலைக்கழகங்கள், பள்ளி வளாகங்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதை வாடிக்கை யாக்கியிருக்கிறார். கடந்த 20ஆம் தேதி அரு ணாச்சலப் பிரதேசம் நரோத்தம் நகரில் ராம கிருஷ்ணா மிஷன் பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்றிருக்கிறார்.

கல்வியுடன் அறிவியல்பூர்வ அணுகுமுறை, செயற்கை நுண்ணறிவு, அறநெறிகள் ஆகிய வற்றை ஒருங்கிணைத்து புதிய கல்விக்கொள்கை யை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள் ளார் என்று அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் உண்மையில் பாஜக ஒன்றிய அரசு அறிமுகப் படுத்தியுள்ள தேசிய கல்விக்கொள்கையில் அத்தகைய அணுகுமுறை உள்ளதா? 

ஆர்எஸ்எஸ் பரிவாரம் தங்களது கல்வி நிலையங்களில் எவற்றையெல்லாம் போதித்து வந்ததோ அவற்றையெல்லாம் வெவ்வேறு பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையில் திணித்திருக்கிறது ஒன்றிய அரசு. இந்த கல்விக் கொள்கையை மாநில அரசுகளுடன் கலந்தாலோ சிக்காமலும் கல்வியாளர்களுடன் கலந்துரையா டல் செய்யாமலும் ஆர்எஸ்எஸ் பேர்வழிகளு டன் ஒப்புக்கு உரையாடிவிட்டு தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்களின் மீது திணித்து விட்டார்கள்.

பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் குறைந்த பட்சம் மாநில அரசுகளுடன் கலந்துரையாடு வதும், ஒப்புதல் பெறுவதும், கூறப்படும் திருத்தங் களை ஏற்பதும், அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப சிறப்பு உட்கூறுகளை உள்ள டக்குவதும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவையனைத்தும் ஒன்றிய பாஜக அரசால் எதேச்சதிகாரமாக நிராகரிக்கப்பட்டன. 

தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதரவு தனியார்மய நடவடிக்கை, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கல்விக்கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் கல்வியா ளர்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால் ஒன்றிய அரசோ பல்கலைக்கழக மானியக் குழு மூலமாகவும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் மூலமாகவும் பல்வேறு உத்த ரவுகள் மூலமும் சுற்றறிக்கை மூலமும் பகுதி பகுதியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. 

ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா வோ கடந்த 18ஆம் தேதி தில்லி பல்கலைக்கழ கத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பேசிய போது, புதிய கல்விக்கொள்கை பாராட்டத்தக்கது. அனைவராலும் வரவேற்கப்பட்ட அக்கொள் கையை யாரும் எதிர்க்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியிருக்கிறார். இது அவர்களுக்கு கைவந்த கலைதான். 

இந்தக் கல்விக்கொள்கை திருத்தியமைக் கப்பட வேண்டியதும், அறிவியல்பூர்வமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதும் அவசியம் என்பதை அமித்ஷாக்கள் உணரவேண்டும்.

;