headlines

img

போலிகளின் கட்சி

கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சிப் பொறுப் பிலிருக்கும் தன்னுடைய ஆட்சியின் சாதனைக ளாக எதையும் மக்கள் முன்பு வைக்க முடியாத நிலையிலேயே வெறுப்பு அரசியலை பரப்பி வரு கிறார் பிரதமர் மோடி.

மறுபுறத்தில் போலியான தகவல்களை பரப்புவதில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை ஈடுபட்டிருப்பது மீண்டும் ஒருமுறை அம்பலமா கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்வதை யே வாடிக்கையாக கொண்டுள்ளது ஒன்றிய அரசு. 

ஆனால் இதை மறைத்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும்வகையில் கச்சத்தீவு பிரச்சனையை கிளப்பி விட்டார் பாஜக மாநி லத்தலைவர் அண்ணாமலை. இந்த தகவல் உண் மைதானா என்பதைக் கூட கண்டறியாமல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் மூலம் காங்கிரசும், திமுகவும் துரோகம் செய்து விட்டதாக தமிழ்நாட்டிற்கு வந்த மோடி பேசி னார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னும் பக்க வாத்தியம் வாசித்தார். வட மாநிலத்தில் நடந்த பரப்புரையிலும் பிரதமர் மோடி கச்சத்தீவு பிரச்சனையை குறிப்பிட்டு காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார்.

ஆனால் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பது போல உண்மை தற்போது வெளி யாகியுள்ளது. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு குறித்த காங்கி ரசின் துரோகத்தை கண்டுபிடித்து விட்டதாக தம்பட்டம் அடித்தார். 

அண்ணாமலைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்களை கொடுத்ததாகவும், அதில் ஒரு அதிகாரி கையெ ழுத்திட்டதாகவும் பாஜகவினர் கூறினர். ஆனால் அப்படியொரு அதிகாரியே அயல்துறை அமைச்ச கத்தில் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இடதுசாரிக ளின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய மோடி அரசு அனைத்து வேலைகளையும் செய்தது. ஆனால் யாருக் கும் தெரியாத உண்மையை அண்ணாமலை கண்டுபிடித்து விட்டதாக கச்சத்தீவு பிரச்ச னையை முன்வைத்து கதறினர்.

ரபேல் கடிகார விவகாரம் போல கச்சத்தீவு குறித்த தகவலும் போலியானது என்பது அம்பல மாகியுள்ளது. இதை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடியும், ஒன்றிய நிதியமைச்சரும் இப் போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப் படுவதாக போலி வீடியோவை வெளியிட்டு பதற்றம் ஏற்படுத்தியவர்கள்தான் பாஜகவினர். தமிழக அரசு அந்த வீடியோ போலியானது என அம்பலப்படுத்தியது. இப்போது அண்ணாமலை யின் ஆவணமும் போலி என்பது புலனாகி விட்டது. இந்த போலிகளுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

;