headlines

img

தேவையற்ற வரி உயர்வு

பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக் காக பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டு றவு வங்கிகளில் கடன் வாங்குவார்கள். அப்படி வாங்க வழியில்லாதவர்கள் சிட் பண்டு நிறுவ னங்களில் சேர்ந்து பணம் பெற்றுக் கொள்வார் கள்.  தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் செயல் படும் சிட் பண்டு நிறுவனங்கள் வாயிலாக ரூ.90 ஆயிரம் கோடி புழங்குகிறது. 

தமிழ்நாடு சிட் பண்டு சட்டத்தின் கீழும் மத்திய அரசின் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு இந் நிறுவனங்கள் செயல்படு கின்றன.  நமது மாநிலத்தில் மட்டும்  2,600 நிறு வனங்கள் இப்படி செயல்பட்டு வருகின்றன. 28 லட்சம் ரூபாய் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்க ளுக்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை என்றும், 80 லட்சம் ரூபாய் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்கள் பாதி வரியைச் செலுத்தினால் போதும் என்றும் அதற்கு மேல் தொகையைச் சீட்டுப் பிடிக்கும் நிறுவனங்கள் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்றும் முன்பு அரசு கூறியிருந்தது.

ஆனால் தற்போதுள்ள ஒன்றிய பாஜக அரசு எல்லாவற்றிற்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதைப் போன்று சிட் பண்டு நிறுவனங்க ளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக் கக்கூடிய, 5 சதவீத கமிஷன் தொகை மீதான  வரியை  12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது.  இதனால் சிட் பண்டு நிறுவ னங்களுக்கு மட்டுமல்ல தமிழக அரசுக்கும் இழப்பு ஏற்படும் என்று சிட்பண்டு உரிமையா ளர்கள் கூறுகிறார்கள். மேலும் கமிஷன்தொகை உயர்வால் சீட்டுப் பணம் செலுத்தும் பொதுமக்க ளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரத்தில், சீட்டுப் பிடிக்கும் வங்கிகள், கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு, ஜிஎஸ்டி வரி எதுவும் விதிக்கப்பட வில்லை.

தமிழகத்தில் மட்டும் சிட் பண்டு நிறுவனங் கள் மூலம் அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் வருமா னமாகக் கிடைக்கிறது.  ஒன்றிய அரசின் முடி வால் மாநில அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வரி உயர்வை ஈடுகட்ட சிட் பண்டு நிறுவனங்கள் தங்களது சேவைக் கான  கமிஷன் தொகையை  5 விழுக்காட்டில் இருந்து 7விழுக்காடாக உயர்த்தி விட்டன.  இத னால் வாடிக்கையாளர்கள் தான் பாதிக்கப்படு கின்றனர். 

சிட் பண்டு நிறுவனங்களில் 1 லட்சத்திற் கும் மேற்பட்டோர் நேரிடையாகவும் மறைமுக மாகவும் பணியாற்றி வருகின்றனர். ஜிஎஸ்டி வரி உயர்வால் சில சிட் பண்டு நிறுவனங்கள் மூடப் படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பலர்  வேலை இழப்பர். எனவே கமிஷன் தொகை மீதான  ஜிஎஸ்டி வரியை  ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும். இல்லையென் றால் பதிவு பெறாத நிறுவனங்கள் அதிகரித்து பொதுமக்கள் செலுத்தும் சீட்டுப் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாமல் போகும். எனவே ஒன்றிய அரசு   சாமானிய மற்றும் நடுத்தர மக்க ளுக்கு எதிரான இந்த வரி உயர்வை திரும்பப் பெறவேண்டும்.

;