headlines

img

பணவீக்கம் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்

பண வீக்கம் இரண்டு வகையாக பேசப்படு கிறது. ஒன்று மொத்த விலைப் பண வீக்கம். அது கடந்த ஏப்ரல் மாதம் 15.08 சதவீதமாக உயர்ந்துள் ளது. 13 மாதங்களாக இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. இன்னொரு வகை சில்லறைப் பண வீக்கம். அதுவும் ஏப்ரல் 2022இல் 7.79 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவும் எட்டு ஆண்டுகளாக இல்லாத அதிகரிப்பு. 

மொத்த விலைப் பண வீக்கம் இரட்டை இலக்கத்திலும், சில்லறை விலை பண வீக்கம் ஒற்றை இலக்கத்திலும் இருப்பது ஏன்? 

இரண்டு வகை பண வீக்கமும் கணக்கி டப்படும் முறைதான் இந்த வேறுபாட்டிற்கு காரணம். மொத்த விலைப் பண வீக்கம், தொழில் உற்பத்திப் பொருட்களை மட்டுமே தனது கூடை யில் (Basket) கொண்டிருப்பது. ஆனால் சில்லறை விலைப் பண வீக்கத்தை கணக்கிடும் கூடையில் தொழில் உற்பத்தி பொருட்கள் மட்டுமின்றி சேவைகளுக்கான விலைகளும் அடங்கும். ஆகவே இரண்டு கூடைகளுமே அதன் உள்ள டக்கப் பொருட்களைப் பொறுத்து தாக்கத்தை வெளிப்படுத்துபவையே. இரண்டுமே ஒட்டு மொத்த தாக்கம் அல்லது வெவ்வேறு வர்க்கங்கள் மீதான வித்தியாசமான தாக்கங்களை துல்லிய மாக வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை. ஆகை யால் வர்க்கப் பிரிவினர் மீதான தாக்கம் அவர்க ளின் நுகர்வைப் பொறுத்து மாறுபடும். 

உதாரணமாக சில்லறை விலை பணவீக்கம் 7.79 சதவீதம் என்பது அந்த கூடையின் மொத்த சராசரியே. ஆனால் அந்த கூடையில் உள்ள உணவுப் பொருள் பண வீக்கம் 8.4 சதவீதம். காய்கறி விலைகள் 15 சதவீதத்திற்கும் மேல். இதன் பொருள் என்ன? வருமானத்தில் பெரும் பகுதியை உணவுக்கு செலவிடுபவர்கள் யாரோ அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதே. பணக்காரர்கள் வசதி நிறைய இருக்கி றது என்றாலும் வயிறு கொள்கிற அளவுக்கு தானே சாப்பிடுவார்கள். ஆனால் ஏழைகள்தான்  வருமானத்தில் அதிகமான பங்கை உணவுக்காக செலவழிப்பவர்கள். ஆகவே அவர்களை அதிக மாக பண வீக்கம் பதம் பார்க்கும். 

நகரவாசிகளை விட கிராமவாசிகள் மிக அதிகமாக பண வீக்கத்தால் அழுத்தப்பட்டுள்ள னர். சில்லறைப் பண வீக்க சராசரி 7.79 சதவீதம் என்றாலும் இது நகர பகுதிகளில் 7.07 எனவும், கிராமங்களில் 8.38 சதவீதம் ஆகவும் இருக்கிறது.  

இதில் இன்னொரு முக்கியமான அம்சம், எரிபொருள், மின்சார கட்டணங்கள் 35 சதவீதம் அதிகரித்துள்ளன. காரணம், ஒன்றிய அரசு போட்டு தீட்டிய வரிகள். இது போக்குவரத்து, சரக்குகள் மீதும் பிரதிபலித்துள்ளது. 

உணவு, போக்குவரத்து போன்ற செலவி னங்கள் ஓராண்டில் 50 சதவீதம் அதிகரித்துள் ளன. தக்காளி விலை கிலோ ரூ.100 ஐ தொட்டுள் ளது. ஆகவே பணவீக்க விகிதங்கள் போக்கு களை புரிந்து கொள்ள மட்டுமே உதவும். தாக்குப் பிடிக்க உதவாது.

 

;