headlines

img

தோல்வியை மறைப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டார்கள்

தோல்வியை மறைப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டார்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நடத்திய ‘ஆபரேசன் சிந்தூர்’ தொ டர்பான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவாக நடந்துள்ளது. எதிர்க் கட்சிகள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பிய தன் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது ‘துல்லிய தாக்குதலை’ நடத்தியுள் ளன. இதற்கு முறையாக பதிலளிக்க வகையின்றி  நிலைகுலைந்து நின்ற பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வழக்கம் போல திசை திருப்பும் உத்தியில் ஈடுபட்டனர் என்பதுதான் உண்மை.

இப்போதும் கூட, நான்தான் இந்தியா - பாகிஸ் தானுக்கு இடையிலான மோதலை நிறுத்தினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அவர் இதுவரை 29 முறை இவ்வாறு கூறியிருப்பதாக நாடாளுமன்றத்திலேயே தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங் கடேசன் உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பி னர்களும் கேள்வி எழுப்பிய போதும் கடைசி வரை டிரம்ப் பெயரை உச்சரிக்கக் கூட பிரதமர் மோடி தயாராக இல்லை. மாறாக உலகின் எந்த தலைவ ரும் போரை நிறுத்தவில்லை என்று பொத்தாம் பொதுவாக பிரதமர் கூறியுள்ளார்.

“அப்படியென்றால் டிரம்ப் ஒரு பொய்யர் என்று கூற பிரதமர் மோடி தயாரா?” என்று எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட கேள்வி எழுப்பிய போதும் பிரதமர் நேரடியாக பதிலளிக்க வில்லை. மாறாக பிரதமரும், உள்துறை அமைச் சர் அமித் ஷா உள்ளிட்டோரும் வீரவசனங்கள் பேசுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தைப் பறித்து, அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது மோடி அரசு. இது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த ஒன்று. இதையே மிகப்பெரிய வெற்றி என பிரதமர் மோடி சித்தரித்தார். அந்த மாநிலத்தின் பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசின் பொறுப்பே ஆகும். அதில் கோட்டைவிட்ட மோடி அரசு அதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை. 

மேலும் ஆபரேசன் சிந்தூர் எவ்வாறு முடிவுக்கு வந்தது, என்ன காரணம் என்பதற்கும் இதுவரை பதில் இல்லை. மாறாக வழக்கம் போல நேருவைக் குற்றம் சாட்டுவது, மல்லிகார்ஜூன கார்கே போன்ற தலைவர்களை மனநிலை பாதித்தவர்கள் என்று வசைபாடுவது, எதிர்க் கட்சி உறுப்பினர்களைப் பேசவிடாமல் கூச்ச லிட்டுத் தடுப்பது போன்றவைதான் பாஜக கூட்டணி அரசின் பதிலாக இருந்துள்ளது.

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க இருப்பதாக அமெரிக்க துணை ஜனாதி பதி ஜே.டி.வான்ஸ் தன்னிடம் கூறியதாக பிரதமர் மோடி கூறுகிறார். இந்த தகவல் இந்திய உளவுத் துறைக்கு தெரியும் என்றல்லவா பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொன்னதாக பிரதமர் அவையில் தெரிவிக்க வில்லை. அனைத்துத் துறையிலும் தோல்வி அடைந்துள்ள மோடி அரசு இந்த விசயத்திலும் தோல்வி அடைந்து அதை மறைப்பதிலும் கூட தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.