கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மூதுரை. ஆனால் கோவில்க ளில் எல்லோரும் வழிபடுவதற்கு இன்னும் தடைகள் இருக்கவே செய்கின்றன. அதை விட கோவில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகவோ, ஓதுவாராகவோ பணி செய்திட இன்னும் பலமான எதிர்ப்புகள் தொட ரத்தான் செய்கின்றன.
எனினும் தமிழ்நாடு அரசு தனது அழுத்த மான, தெளிவான நடவடிக்கைகளால் அர்ச்ச கர்கள் நியமனம், ஓதுவார்கள் நியமனம் ஆகிய வற்றை அடுத்தடுத்து செய்து வருகின்றது. அந்த வகையில் திங்களன்று மேலும் ஐந்து பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களை நியமனம் செய்திருக்கிறது தமிழக அரசு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
மறுபுறத்தில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் என்ற பெயரில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து ஆகம கோவில்களி லும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளாமல் தற்போதுள்ள நிலையையே தொடருமாறும் சிவாச்சாரியார் கள் சங்கத்தின் மனுவுக்கு பதிலளிக்குமாறும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தர விட்டுள்ளது.
இந்த வழக்கில் தகுந்த பதிலளித்து அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத் துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி பெறவே தமிழக மக்கள் விரும்புகிறார் கள். ஏனெனில் ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை குறிப்பிட்ட ஆகம விதி களைப் பின்பற்றும் கோவில்களில் அர்ச்சகர்க ளாக நியமிக்கலாம். இதற்கு சாதி தடையாக இருக்காது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி யும், இரண்டு நீதிபதிகள் அமர்வும் ஏற்கெனவே தடை விதிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையையும், அர்ச்சகர் மற்றும் ஓதுவார் நியமன உரிமையையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு சீரிய முயற்சிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து அதன் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துவது, துணை நிற்பது கடமையாகும்.
அனைத்து சாதியினர் மட்டுமல்ல, திருநர் உள்ளிட்ட அனைத்து பாலினத்தவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராக நிய மிக்கப்படுவது அவசியம். இந்த வகையில் கேரள மும், தமிழ்நாடும் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.