headlines

img

தலையாட்டி பொம்மைதான்  சுயசார்பின் அடையாளமா?

சுயசார்பு இந்தியாவை உருவாக்க கொரோனா ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கொரோனா நிவாரணப் பணிகளுக் காக ரூ.20லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதாக கூறி  அவர் ஆற்றிய உரையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த தொகை எந்தெந்தத் துறைகளுக்கு ஒதுக்கப்படும் என்று விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அதில் பெருந்தொகையை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கே பங்கு வைத்தார்.  அதுமட்டுமின்றி ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கி உட்பட அனைத்துத் துறைகளிலும் தனி யார்மயத்தை தீவிரப்படுத்தப்போவதாகவும் அறி வித்தார். பொதுத்துறை நிறுவனங்களை அழித்து விட்டு சுயசார்பை எவ்வாறு உருவாக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனி டையே மத்திய அரசினால் ஒப்புதல் அளிக்கப் பட்ட புதிய கல்விக் கொள்கையில் அந்நியப் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் தடையின்றி கடைவிரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.  அனைத்துத் துறைகளையும் அந்நியருக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் கொடுத்துவிட்டு தேசத்தை எவ்வாறு சுயசார்புடையதாக மாற்று வது என்று பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களு க்கு வகுப்பெடுக்கத் துவங்கியுள்ளார்.

ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரையாற்றிய அவர், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை சிலாகித்து பேசியிருக்கிறார். தரமான விளை யாட்டு பொம்மைகளை உள்நாட்டிலேயே உரு வாக்குவோம் என்று கூறிவிட்டு தலையாட்டி பொம்மையை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். பல ஆயிரம் கோடி கொட்டிக் கொடுத்து ரபேல்  விமானத்தை பிடிவாதமாக கொள்முதல் செய்யும்  பிரதமர், மறுபுறத்தில் பொம்மை உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிறார். தாம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளி களிடம் நடந்து கொள்வதுபோல நாட்டு மக்களும் மாற வேண்டும் என்று கூற வருகிறார் போலும். விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுப்பது, எட்டுவழிச்சாலை போன்ற திட்டங் பள் மூலம் விவசாயிகளை அவர்களது நிலத்தி லிருந்து விரட்டுவது, அவர்களுக்கு உரிய கடன்  வசதியை தரமறுப்பது, பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் ஏமாற்றுவது போன்ற வேலை களில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், கொரோனா காலத்திலும் பயிர் நடவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டிருப்பதாக பாராட்டு கிறார்.

விவசாயத்தைப் பாதுகாப்பதற்கு பதிலாக  விவசாயிகளை, விவசாயத்தை மத்திய அரசு காவுகொடுத்து கொண்டிருக்கிறது. இது நீடித்தால்  உணவு தானிய உற்பத்தி குறைந்து இறக்கு மதியையே நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இராஜபாளையம், கோம்பை போன்ற உள்நாட்டு நாய் வகைகளையே வீடுகளில் வளர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். உள்நாட்டில் பொம்மை, நாய்கள் போன்றவற்றோடு நிறுத்திக்கொள்ளும் பிரதமர் கேந்திர துறைகளை அழித்து எப்படி சுயசார்பை உருவாக்குவார் என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

;