headlines

img

விரக்தி புருஷர் மோடி

2014 தேர்தலின் போது உற்சாக மனநிலையில் இருந்த நரேந்திர மோடியும் அவரது பாஜக சகாக்களும் தற்போது விரக்தி மனநிலையில் உள்ளனர் என்பது அவர்களது பேச்சுக்களின் வாயிலாக வெளிப்படுவது தெளிவாகத் தெரிகிறது.நாடாளுமன்ற தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்தநிலையில், பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டதலைவர்களும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆற்றுகின்ற உரைகளில் எப்படியாவது இந்ததேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும்என்கிற வெறியுணர்வுதான் தென்படுகிறதேயன்றி ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான விவாதங்கள், விவரங்கள் இடம்பெறவில்லை.இந்த நாட்டை ஆள்வதற்கு பாஜகவை விட்டால் வேறு கட்சியே இல்லை என்றும் நரேந்திர மோடியை விட்டால் வேறு தலைவரே இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்களின் தலைவர்கள் மிரட்டலாகவும் விரட்டலாகவும் நாடு முழுவதும் அலை மோதிக் கொண்டிருக்கின்றார்கள். 

இவர்களின் தலைவர் நரேந்திர மோடியின் பிரச்சார உரைகள் அவர் வகிக்கும் பிரதமர்பதவிக்கு ஏற்புடையதாகவும் தகுதியுடையதாகவும் இல்லாமல் தரம் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. 2014ல் உருவாக்கப்பட்ட ஊதி பெரிதாக்கப்பட்ட விகாஷ் புருஷர் விளம்பர தோற்றம்இப்போது அடிபட்டு போய்விட்டது. அந்ததேர்தலில் அவர்கள் கட்சியின் சார்பில் கூறியவாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படாததால் நாட்டு மக்கள் இந்த முறை பாஜகவுக்குபதிலடி தர தயாராகி விட்டனர். அதன் விளைவே அவர்களது இத்தகைய பேச்சுக்கள். மேற்குவங்கத்தில் ஸ்ரீராம்பூரில் திங்களன்றுபிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நாடு முழுவதும் தாமரை மலரும், மேற்குவங்கத்திலும் தாமரைமலரும் என்று கூறியிருக்கிறார். நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பது தெரியாமல் அவர் பேசவில்லை. எப்படியாவது மாநில ஆட்சியையும் கைப்பற்றிவிட துடிக்கும் மனநிலையையே அவரது பேச்சு உணர்த்துகிறது. மம்தாவை திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைவிட்டு பாஜகவில் சேர்வார்கள். அதன் பிறகு மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம்சரிந்துவிடும். இன்று கூட திரிணாமுல் காங்கிரஸ்எம்எல்ஏக்கள் 40 பேர் என்னுடன் பேசினர் என்ற மோடியின் பேச்சு அவரது ஜனநாயக நெறிமுறைகள் தாண்டிய, தேர்தல் விதிகளை மீறிய, அப்பட்டமான கட்சித்தாவலை ஊக்குவிக்கும் பேச்சாகும்.

ஏற்கெனவே பல மாநிலங்களில் தேர்தல் நடந்தபிறகு சட்டமன்றத்தில் போதிய பலம் இல்லாதபோதும் மற்ற கட்சிகளை வலைவீசி பிடித்து பாஜகஅல்லது பாஜக ஆதரவு ஆட்சிகளை ஏற்படுத்தினர். அதைப்போல மேற்குவங்கத்திலும் நடத்துவேன் என்று விடுக்கப்பட்ட மிரட்டலே அவரதுபேச்சாகும். ஏனெனில் கோவா, மணிப்பூர் போன்றமாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜகவினர் நடத்திய ஜனநாயக படுகொலை அரசியல் சாசன நெறிமுறைகளை மீறியதாகும் என்பது நாடறிந்ததே.ஏற்கெனவே ஒருமுறை மேற்குவங்கத்தில் பேசும்போது, திரிபுராவில் நடந்ததைபோல மேற்குவங்கத்திலும் நடக்கும் என்று கூறியிருந்தார். இப்போது அதனுடைய அடுத்தகட்டத் திட்டமாகவே மோடி பேசியிருக்கிறார் என்பது தெரிகிறது.இத்தகைய ஜனநாயக விரோத, தேர்தல் விதிமுறை மீறிய பேச்சுக்கு தேர்தல் ஆணையம் என்னநடவடிக்கை எடுக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நாட்டுமக்கள் நரேந்திர மோடிக்கு எதிரானநல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்பது உறுதி. 

;