headlines

img

பாசிச சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பேரெழுச்சி

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று ஆட்சியாளர்களே நினைத் திருக்க மாட்டார்கள். பங்களாதேஷ் எல்லையை யொட்டியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் மக்கள் போராடுவார்கள். அவர்களை எளிதில் ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் மொழியால் பல மாநிலத்தவர்களாக இருந்தாலும் உணர்வால் நாங்கள் இந்தியர்கள் என்பதை  மத்திய அரசின் கொடூர  சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியாக திரண்டு வரும் மக்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். 

நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு இடது சாரிகளும் காங்கிரஸ் கட்சியுமே காரணம் என்று பிரதமர் பேசத் தொடங்கியுள்ளதிலிருந்தே இந்த போராட்டத்தின் வீச்சு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கடந்த சில நாட்களாக தலைநகர் தில்லி இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டக் களமாக மாறி யுள்ளது. பொதுமக்கள் திரண்டு வருவதை தடுக்க 12 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடினர். மற்ற மாநிலங்களில் இருந்து, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்க சாலை களில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.ஆனால் எல்லாவற்றையும் மீறி நாள்தோறும் தில்லியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராம சந்திர குஹா பெங்களூருவில்  கைது செய்யப் பட்டார். தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட இடதுசாரி கட்சித்தலைவர்கள் கைது செய்யப் பட்டனர்.  தடுப்பு அரண்களையும் மீறி  வியாழ னன்று காலை   செங்கோட்டை பகுதியில் ஏராள மானோர் திரண்டதால் காவல்துறையினர் திணறி னர். அடக்குமுறையையும் மீறி உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் தோல்வியை ஜீரணிக்கமுடியாமல் ஆட்சியா ளர்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்க ளை நிர்பந்தப்படுத்தி மொபைல் மற்றும் இன்டர் நெட் சேவையை துண்டித்து வருகின்றனர். மக்கள் கூடுவதை தடுக்க பல மாநிலங்களில் 144 தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்துள்ளனர். சென்னை தவிர கோவை, திருச்சி, நெல்லை என பல பகுதிகளில் நடைபெற்று வரும் மக்களின் ஆவேசமிக்க போராட்டம்தான் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும். இதனால் இஸ்லாமிய மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் நீதி கிடைக்க நடைபெறும் இந்தப்போராட்டம் வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

;