வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத் தாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுக ளில் மட்டும் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த ‘வளர்ச்சி’ மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் படிப்படியாக அதிகரித்து வந்தி ருக்கிறது எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இப்படி கடன் வாங்கியிருப்பவர்கள் எல்லாம் சாதாரண நபர்கள் அல்ல; மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்கள். இவர்கள் வங்கி களில் வாங்கிய கடனை ஒருபுறம் செலுத்தாமல் இருந்து கொண்டே, மறுபுறம் புதுப்புது நிறுவ னங்களை தொடங்கி வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்கள், கடன் மோசடியில் ஈடுபடும் நிறு வனங்களுக்கு மீண்டும் கடன் கொடுக்க வங்கிக ளுக்கு நெருக்கடி கொடுக்கும் அவலம்தான் அரங் கேற்றப்பட்டு வருகிறது. அதே நேரம், மோடியின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கல்விக்கடன் வழங்கும் மாண வர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப் பட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 2015ம் ஆண்டில் 3.34 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப் பட்ட கல்விக்கடன், 2019ஆம் ஆண்டு 2.5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கல்விக்கடனை செலுத்த இயலாத மாண வர்களின் பட்டியலோடு, புகைப்படமும் வெளியி டப்படுகிறது. படித்து முடித்து வேலைக்கு காத்தி ருக்கும் நிலையில் கூட வீட்டிற்கு சென்று வங்கி அதிகாரிகளும் வசூல் ஏஜெண்டுகளும் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ரூ. 2.05 லட்சம் கோடி கடன் வைத்தி ருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலைக்கூட மோடி அரசு வெளியிடத் தயாராக இல்லை. உச்சநீதிமன்றம் வெளியிடச் சொல்லியும் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஒரே சட்டம், ஒரே நீதி என பேசும் பாஜக, வசதி படைத்த முதலாளிகளுக்குக் காக சட்டத்தை வளைத்து ஒடிக்கிறது. ஆனால் எளிய மக்களுக்கு சட்டத்தில் இருக்கும் வாய்ப்பை கூட வழங்காமல் விரட்டி அடிக்கிறது. இதே மோடி அரசு 2015 முதல் 2018ம் நிதி யாண்டு வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி யில் வாங்கிய கடன் ரூ. 3 லட்சத்து 8 ஆயிரத்து 286 கோடியை வராக்கடன் என்ற பெயரில் தள்ளு படி செய்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி யதும் கவனிக்கத்தக்கது. ஒரு நாட்டின் சமமான வளர்ச்சிக்கு மாறாக கார்ப்பரேட்களின் வளர்ச்சியில் மட்டும் அக்கறை காட்டும் அரசாக மோடி அரசு இருந்து வந்திருக்கிறது என்பதைத்தான் வெளிவரும் ஒவ்வொரு புள்ளி விபரங்களும் தெரிவிக்கின் றன. ஏற்கனவே நாட்டின் பொருளாதார நிலை பல துறைகளில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந் நிலையில் வங்கிகளின் வாராக்கடனும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல. இது பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே வங்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலை பாரபட்சமின்றி வெளியிட்டு, அந்த நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.