headlines

img

இதுவும் ஒரு படுகொலைதான்

சென்னை பள்ளிக்கரணையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீன் சாதி ஆண வப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. பிரவீனை படுகொலை செய்த ஷர்மிளா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளனர். உண்மையில் இதுவும் ஒரு படுகொலைதான்.

பிரவீன், ஷர்மிளாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களால் படுகொலை செய்யப் பட்ட நிலையில், ஷர்மிளா பிரவீனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் தூக்கிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர் இறந்துள்ளார். காவல்துறை யினரின் அலட்சியமே பிரவீன் கொலை மற்றும் ஷர்மிளாவின் தற்கொலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

பட்டியலின பிரிவைச் சேர்ந்த பிரவீனும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஷர்மிளாவும் காதலித்து சாதிமறுப்பு, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஷர்மிளாவின் குடும்பத்தினரிடமிருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய் துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை இல்லாத நிலையில்தான் பிரவீன் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

இதன்பின் ஷர்மிளாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு தேசிய பட்டியலின மற்றும் பழங்குடி யினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனினும் ஷர்மிளாவுக்கு  தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சமூக நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் உயர்ந்து நிற்கும் தமிழகத்தை தலைகுனிய வைப்பதாக சாதி ஆணவப் படுகொலைகள் தொ டர்கின்றன. 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 203 சாதி ஆண வப் படுகொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 23 சாதி ஆணவப் படுகொலை கள் நடந்துள்ளன. உண்மையில் இதைவிட அதிக எண்ணிக்கையில்தான் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கக்கூடும். பல சம்ப வங்களில் முறையான வழக்கு பதியப்படுவ தில்லை; அல்லது திசை திருப்பப்படுகின்றன.

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டுமென ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த அ.சவுந்தரராசன் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அது நிராகரிக்கப் பட்டது. சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இத்தகைய கொடும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

 

;