headlines

பணிகளை தீவிரப்படுத்துக!

வங்கக் கடலில் மையம் கொண்ட மிக்ஜம் புயல் தலைநகர் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றியுள் ளது. புயல் மற்றும் பெருமழை காரணமாக கடு மையான பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப் பட்டு போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடு கள் மாநில அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்த போதும், மழையின் தாக்கம் மிகக் கடுமையாக மாறியுள்ளது.

2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போல சென்னையும், புறநகர் பகுதியும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல பகு திகளில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியி ருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

புயல் சென்னையை நேரடியாக தாக்கும் அபாயம் குறைந்துள்ள போதிலும், மழை தொ டரும் என்று கணிக்கப்பட்டுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கள் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிக ளில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்ற போதிலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

இதனிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வரிடம் தொலைபேசி வழியாக நிலைமையை கேட்டறிந்ததாகவும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்புமாறு மாநில அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள் ளன. ஒன்றிய அரசு அனைத்து வகைகளிலும் மாநில அரசுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி செய்திட வேண்டும்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது மற்றும் உடனடி நிவாரண உதவிகளை செய்வதே இப்பொழுது முதல் பணியாக உள்ளது. எனினும் எதிர்காலத்தில் இத்தகைய பெருமழை, வெள் ளம் ஏற்படும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்தும் சிந்திக்க வேண்டியநேரமிது.

இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்கப்பட முடியா தவை என்ற போதும், மழை, வெள்ளத்தை சமாளிக்க முடியாத அளவு நிலைமை மாறியுள்ள தற்கு பல்வேறு பகுதிகளில் நீர் போக்குவரத்து வழிகள் அடைக்கப்பட்டிருப்பது முக்கியக் கார ணமாகும். ஏழை, எளிய குடிசை பகுதி மக்கள் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்கப் பட்டு, அகற்றப்படுகிறார்கள். ஆனால் பல பகா சுர முதலைகளின் ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  இயற்கை கற்றுத் தரும் பாடத்தை அனுபவமாகக் கொள்ள வேண்டும்.