headlines

img

அமைதியின்மைக்கு காரணம் யார்?

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதை சமாளிக்க மோடி அரசினால் முடிய வில்லை. இந்தக் கலவரங்களுக்கும், வன்முறைக் கும் மோடி அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வழக்கம் போல எதிர்க் கட்சிகளின் மீது பழி போடுகிறார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நிறை வேற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. இத னால்தான் அவசர அவசரமாக குடியுரிமைச் சட்டத்தை திருத்தும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர். 

இந்த மசோதாவை இப்போது நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்ற எதிர்க்கட்சிகளின்  யோசனையை மோடி அரசு ஏற்காமல் பிடிவாதத்துடன் மக்களவையில் மசோ தாவை நிறைவேற்றியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை யில்  பல்வேறு கட்சிகளை மிரட்டி மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டதால்தான் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. பல்வேறு கல்வி நிலையங்களி லும் மாணவர்கள் போராடி வருகின்றனர். வன் முறையால் அவர்களது போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. மேற்குவங்கத்தில் நான்கு நாட்க ளாக போராட்டம் நீடிக்கிறது. அசாமில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளாக உயர்ந்துள்ளது. தில்லியில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கெல்லாம் காரணம் மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் தான். இந்த சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுத்தன? அரசியல் சாசனத்தில் 370ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை துண்டாடிய தால் அங்கு மயான அமைதி நிலவுகிறது. தற்போது வடகிழக்கு மாநிலங்களும் வன்முறை களமாக மாறிவிட்டது. இணைய வசதியை துண்டிப்பதால் மட்டும் கலவரங்களை ஒடுக்கிவிடலாம் என மோடி அரசு செயல்படுவது அறிவுடைய செயல் அல்ல.

தீயை மூட்டி விட்டது மோடி அரசின் மதவெறி அடிப்படையிலான செயல் திட்டம்தான். அந்த சட்டங்களை வாபஸ் பெறாமல் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டுவது ஏற்கத் தக்கதல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான அரசியல் சாசனத்தின் பாதுகாப்புக்காக போராடுகிறவர்களை பாகிஸ்தான் ஆதரவா ளர்களாக முத்திரை குத்துவதன் மூலம் பிரச்ச னையை தீர்க்க முடியாது. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த சட்டத் திருத்தத்தை முற்றாக திரும்பப் பெறுவதே இப்போது அரசு முன்னுள்ள ஒரே வழியாகும். 

;