headlines

img

லெபனான் மீது கை வைத்தால்...

காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், மறுபுறம், லெபனானுடனான எல்லையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆயுதக் குழுவினருடனும் மோத லில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே பல்லாண்டு களாக இந்த மோதல் நீடித்து வரும் நிலையில், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் துவக்கியது முதல், பாலஸ்தீன சகோதரர்களுக்கு ஆதரவு என்ற முறையில் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரே லின் எல்லையையொட்டி தனது துருப்புகளை குவித்து பதிலடி தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாவுடனான ஒரு தற்காலிக அமைதி பேச்சுவார்த்தைக்கு  இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. இஸ்ரேலின் எல்லைக்கு அருகிலிருந்து உடனடியாக ஹிஸ்புல்லா தனது துருப்புகள் அனைத்தையும் ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனை களை இஸ்ரேல் விதித்துள்ளது. அதற்கு ஹிஸ் புல்லா மறுத்து வருகிறது. இந்த பின்னணியில், பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை என்றால், ஹிஸ்புல்லா மீது ஒரு முழு அளவி லான போரை அறிவிப்போம் என்று இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. அப்படி இஸ்ரேல் போர் அறிவிக்குமானால், அதை முழு மையாக ஆதரிப்போம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறி யுள்ளார்.

இது சாதாரணமானது அல்ல. காசாவின் ஹமாஸ் இயக்கத்தை விட பல மடங்கு பலம் வாய்ந்தது லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம்.  ஹிஸ்புல்லா மீதான போர் அறிவிக்கப்பட்டால் அது அந்த பிராந்தியம் முழுமைக்குமான மிகப் பெரும் யுத்தமாக நிச்சயம் மாறும்.

ஹமாஸ் அமைப்பு மிகப் பெரிய ராணுவ பலம் கொண்டது அல்ல. ஆனால் அதை அழித்தொ ழிப்போம் என்று சொன்ன இஸ்ரேல், 2 மாத காலமாக ஹமாஸ் போராளிகளிடமே  திணறி வருகிறது என்பது ஒரு உண்மை. ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் துவங்கினால் அது சில மாதங்கள் அல்ல, வருடக்கணக்கில் நீடிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்ல, ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் என்பது லெபனான் மீதான தாக்குதலாகும். லெபனான் மீதான போர் என்பது, ஏற்கெனவே இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு அரசு அறிவித்துள்ள ‘அகண்ட இஸ்ரேல்’ அமைப்பதற்கான போராகவே  இருக்கும். அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். அப்பிரதேசம் முழுவதும் ரத்தக் களறியா கவும் பிணக்காடாகவும் மாறும் அபாயம் ஏற்படும்.

இத்தகைய பேரழிவு திட்டத்தை, மிரட்டலை இஸ்ரேலும், அமெரிக்காவும் உடனடியாக கைவிட வேண்டும். ஹிஸ்புல்லாவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.