headlines

img

வங்கிகள் இணைப்பு யாருக்காக?

இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அறிவித்தார். எல்ஐசி நிறுவனம் பாலிசி தாரர்களுக்கு நேர்மையான, வெளிப்படையான சிறந்த சேவையை வழங்கி வருவதோடு, நாட்டின் பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. இந்த நிலையில் எல்ஐசி பங்கு களை தனியாருக்கு விற்பதால் வெளிப்படை யான நிர்வாகம் ஏற்படும் என்று கூறுவது அப்பட்ட மான பொய்வாதமாகும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. ஒரே நேரத்தில் சுமார் லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டதால் அத னுடைய சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி அம்பானியின் ஜியோ போன்ற நிறுவனங்களை வளர்த்துவிடுவதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.  இந்த நிலையில் பத்து பொதுத்துறை வங்கி களை நான்கு வங்கிகளாக ஒருங்கிணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த இணைப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறை க்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். எல்ஐசி, பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை வங்கிகளையும் சீரழிப்பது தான் மோடி அரசின் நோக்கமாக உள்ளது. 

தனியார் வங்கிகள் எந்த நேரமும் திவாலா கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்த போதும், சமீபத்திய உதாரணமாக யெஸ் வங்கியின் தடுமாற்றம் உள்ளது. இதேபோல பல்வேறு தனியார் வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

கடந்த முப்பது ஆண்டுகளாகவே சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை வங்கிகளை கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வேலையை மத்திய ஆட்சியாளர்கள் செய்து வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக வங்கித்துறையை முற்றி லும் கார்ப்பரேட் மயமாக்க மோடி அரசு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு  பகுதியே பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையாகும். இப்போதும் கூட ஆயிரக்கணக்கான கிரா மங்களில் வங்கி சேவை இல்லை. அனைத்து கிராமங்களுக்கும் மக்களுக்கும் வங்கி சேவையை உறுதிப்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே கிடைத்துக் கொண்டிருக்கிற வங்கி சேவையையும் பறிக்கிற வேலைதான் நடந்து கொண்டிருக்கிறது.

பத்து பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிக ளாக இணைக்கப்படும் என்றால் அதன் பொருள் ஆறு வங்கிகள் மூடப்படும் என்பதுதான். வங்கி கள் இணைப்பை எதிர்த்தும் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், வாராக்கடன் என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை யடித்த பணத்தை வசூலிக்கக் கோரியும் மார்ச் 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது வங்கி ஊழியர்களின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் பிரச்சனையுமாகும். 

;