காற்றின் தேசம் எங்கும் கானம் சென்று தங்கும்
இசை ஞானி என்று அன்போடு அழைக்கப் படும் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா என்பது முற்றிலும் பொருத்தமான ஒன்று.
சிம்பொனி இசை அமைத்து சாதனை நிகழ்த்தி யதற்காகவும், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கண்டுள்ளதற்காக வும் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, சங்க இலக்கியங்களுக்கு இளைய ராஜா இசையமைக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். இதை ஏற்றுக் கொள்வதாக இளையராஜா அறிவித்திருப்பது வரவேற் கத்தக்கது.
தமிழர் வாழ்வியல் மற்றும் அழகியலின் சார மாக விளங்கும் சங்க இலக்கியப் பனுவல்களுக்கு இளையராஜா இசை அமைப்பதன் மூலம் தேனோடு கலந்த தெள்ளமுதாய் புதிய அனுப வம் ஏற்படும் என்பது மட்டுமின்றி, சங்க இலக்கி யத்தின் பெருமையை இசை வடிவில் உலகம் உணரவும் வாய்ப்பு ஏற்படும்.
பாவலர் வரதராசனோடு இணைந்து செங் கொடி இயக்க மேடைகளில்தான் இளையராஜா வின் இசைப் பயணம் துவங்கியது என்பது குறிப்பி டத்தக்கது. திரை உலகில் அவர் இசையமைக்கத் துவங்கிய காலத்தில் இந்திப் பாடல்கள் தான் தமிழ்நாட்டிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. நாட் டுப்புற இசையை முழுமையாக உள்வாங்கியி ருந்த இளையராஜா திரை இசையின் திசை யையே திருத்தியமைத்தார்.
இந்திய செவ்வியல் இசை, மேற்கத்திய செவ்வி யல் இசை, நாட்டுப்புற இசை, மக்கள் இசை என அனைத்தையும் கற்றுத் தேர்ந்து ஒரு இசை ராஜாங்கத்தையே அவர் திரையில் நிகழ்த்தினார். குறிப்பாக பின்னணி இசையை முன்னணிக்கு கொண்டு வந்ததில் இளையராஜாவுக்கு பெரும் பங்குண்டு. ஒரு படத்தின் இயக்குநருக்கு நிகராக தன்னுடைய பின்னணி இசையின் மூலம் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுப்பவராக அவர் திகழ்ந்தார்.
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும் என்ற அவர் இசை அமைத்த வரிகள் இளையராஜாவுக்கும் முற்றிலும் பொருந்தும். அவருடைய சில நிலைபாடுகளில் வேறு பாடுகள் உண்டு. ஆனால் அவருடைய இசை ஞானத்தின் மீது யாருக்கும் முரண்பாடு இருக்க முடியாது எனும் அளவுக்கு தன்னுடைய உழைப் பால் உச்சம் தொட்டவர் இளையராஜா.
திருவாசகத்தின் சில பாடல்களுக்கு அவர் ஏற்கெனவே இசை அமைத்துள்ளார். சங்க இலக்கி யப் பாடல்களை தேர்வு செய்து அவர் அமை க்க இருக்கும் இசை அவருடைய சாதனையில் மேலும் ஒரு மகுடமாக விளங்கும் என்பது திண்ணம்.
இளையராஜாவின் பாடல்கள் காற்றைப் போல அனைவருக்கும் பொதுவானவை. அவரும், அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண் டும் என்பதுதான் தமிழும், இசையும் அறிந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.