headlines

img

இலங்கையின் புதிய அத்தியாயம்

33 நாட்களிலேயே ராஜபக்சேவின் ராஜ்ஜி யத்தை சுருட்டி விட்டார்கள் இலங்கை மக்கள். இனரீதியாக, மொழி ரீதியாக எந்த மக்களை இலங்கை ஆளும் வர்க்கம் பிரித்து வைத்திருந்த தோ அதே மக்கள், இனம், மொழி, மதம் என அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு ஒரே உரு வமாக, ஒரே வர்க்கமாக எழுந்து நின்றனர்; இது காறும் அதிகாரத்தின் துணை கொண்டும் இன வெறி கிளப்பியும் தங்களை பீடித்திருந்த ஆட்சியா ளர்களின் அடித்தளத்தையே அசைத்தனர்; 2005ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் எதேச்சதி காரியாக - யாருக்கும் அஞ்சாதவர் என்ற மமதை யிலிருந்த மகிந்த ராஜபக்சேயை அடிபணிய வைத்தனர்.

மக்கள் சக்தியே மகத்தான சக்தி என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர் இலங்கை மக்கள். பிரதமர் பதவியிலிருந்து மகிந்தாவை ஓட வைத் துள்ளனர். ஆனால் இன்னும் இலங்கை மக்களின் முழு இலக்கு நிறைவேறவில்லை. கோத்தபய வும் வெளியேற வேண்டும். இலங்கை அமைச்சர வையிலும் அதிகாரத்தின் முதன்மைப் பதவிகளி லும் 40 பேர் ராஜபக்சே குடும்பத்தினர்தான். எதேச் சதிகாரிகள் யாரையும் நம்ப மாட்டார்கள். எல்லா இடங்களிலும் குடும்பத்தினரையே அமர்த்து வார்கள். 

உலகின் அனைத்து முதலாளித்துவ - நில பிரபுத்துவ ஆட்சியாளர்களைப் போலவே மகிந்த ராஜபக்சேயும், கோத்தபய ராஜபக்சேயும் மிகத் தீவிரமாக நவீன தாராளமயக் கொள்கைகளை யும் அமலாக்கினர். உற்பத்திப் பொருளாதாரம் அல்லாத இலங்கை, பிரதானமாக சுற்றுலா வரு மானத்தையே நம்பியிருந்த பின்னணியில், எந்தவிதமான பெரும் தொழில் மற்றும் விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் திசையில் ஆட்சி நடக்காத நிலையில், கொரோனா ஊரடங்கு காலம் இலங்கையின் பொருளாதாரத்தை நொறுக்கியது. கையில் இருந்த அந்நியச் செலாவணி ஒட்டு மொத்த மும் தீர்ந்தது. அரசாங்கமே சில நாட்களில் ஓட்டாண்டியாக மாறியது. சர்வதேச கடன்கள்  கழுத்தைப் பிடித்தன. தப்பிக்க வழிதெரியாத ராஜ பக்சேக்களின் அரசு, மக்கள் மீது அனைத்து சுமைகளையும் ஏற்றியது. விலைவாசி விண்ணைத் தாண்டியது. திட்டமிடாமல் இறக்கு மதியை நிறுத்தியதால் பொருட்கள் தட்டுப்பாடு தீவிரமடைந்தது. உணவு இல்லை; எரிபொருள் இல்லை; வேலையில்லை; கையில் காசுமில்லை. கொதித்தெழுந்தது இலங்கை.

மக்கள் வீதிக்கு வருவார்கள் என்றும் இனம், மொழி வேறுபாடுகளை மறந்து கரம் கோர்ப்பார்கள் என்றும் சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை ராஜபக்சே அரசு. மக்கள் ஒன்றுபட்டார் கள். அரசியல் வேறுபாடின்றி தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பெரும் போராட்டக் களத்தில் இறங்கினார்கள். சமீப நாட்களில் உலகின் மிகப் பெரும் மக்கள் எழுச்சியைக் கண்ட நகரமாக மாறியது கொழும்பு. ஒரு மாத காலத் திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் பிரதமர் மகிந்தாவை ராஜினாமா செய்ய வைத்து பணிந்தி ருக்கிறது கோத்தபய அரசு. அவரும் வெளியே றும் நிலை வரும். மக்களின் எழுச்சி இலங்கை யின் வரலாற்றில் புதியதோர் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.