headlines

img

டாலரிலிருந்து விலகுவோம்!

நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கள் சொந்த  நாணயத்தை பயன்படுத்துவது மெதுவாக பல நாடுகளிடம் அதிகரித்து வருகிறது.    
கடந்த ஆகஸ்ட் மாதம் 22-24 தேதிகளில் தென் ஆப்பிரிக்கா தலைமையில்  நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக நாடுகள் தங்களின் சொந்த நாணயங்களை பயன் படுத்துவது குறித்த நகர்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

இதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக உள்ளூர் நாணயங்களை பயன்படுத்துவது சற்று முன்னேறியுள்ளது. இத னால் உலக நிதி இயக்கவியல் படிப்படியாக மாறி வருகிறது. சொந்த நாணயங்களின் மூல மான பணப்பரிவர்த்தனை வேகம் மெதுவாக இருந்தாலும், கூட்டமைப்பில் உள்ள நாடுகள் சொந்த நாணயங்களை பயன்படுத்தும் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் மூலம் சில வளரும் நாடுகளை அமெரிக்க டால ருக்கு மாற்றாக சீனாவின் யுவானில் வர்த்தகம் செய்ய ஊக்குவித்துள்ளது. மேலும் வளரும் நாடுகளின் சொந்த நாணயத்தை வலுப்படுத்த வும், அமெரிக்க டாலரில் மேற்கொள்ளும் வர்த்த கத்தை அதிலிருந்து மெல்ல மெல்ல விலக்கவும் முயற்சிகள் செய்து வருகிறது. இவற்றோடு ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் பிற நாடுகள்  பொருளாதாரத்தின் சில துறைகளில் தங்களது சொந்த  நாணயங்களில் வர்த்தகம் செய்ய துவங்கியதன் மூலம்  சீனா தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

மறுபுறம் ஆப்பிரிக்க நாடுகள்  தங்கள் நாட்டின்  பொருளாதாரங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கும் வகை யில் கென்யா, நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்கா வில் உள்ள பிற நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை கைவிட்டு பிரிக்ஸ் கூட்ட மைப்பின் ஆலோசனையை பின்பற்ற முடிவெடுத் துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் புதிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இணைந்து டாலருக்கு மாற்றான உள்ளூர் அல்லது பொது நாணயத்தில் வர்த்தகம் செய்யும் பொழுது, அமெரிக்க டால ரின் உலகளாவிய மேலாதிக்கத்தை மெதுவாக உடைக்க முடியும் என்ற நம்பிக்கை விதை ஊன்றப்பட்டுள்ளது. டாலரின் ஆதிக்கம் மூலமே அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகளின் பொருளாதாரங்களை சிதைத்து வருகிறது. எனவே டாலரின் ஆதிக்கத்தை உடைப்பது, ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை நொறுக்கு வதற்கான முதல் படி.