உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத் தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்த தொழிலாளர்கள் 40 பேர் இடிபாடு களுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி செவ்வாயன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை கள், இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப் படை, எல்லைச் சாலை அமைப்பு, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இணைந்து ஈடுபட்டுள்ளன.
மாநில முதல்வர் புஷ்கர்தாமி நிகழ்விடத்து க்கு சென்று பார்வையிட்டுள்ளார். பிரதமர் மோடி தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்குவதாகக் கூறியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்தது ஞாயிறு அதிகாலை 4 மணி. அதன்பிறகு தான் மறுநாள் திங்களன்று இமாச்சல் மாநில எல்லைப் பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி 4.5 கி.மீ தூரம் நடைபெற வேண்டியுள்ளது. ஆனால் 200 மீட்டர் தூரத்திலேயே இந்த விபத்து தற்போது நடந்திருக்கிறது. முழு நீளமும் சுரங்கம் அமைக்கும் வரையில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கிற எச்சரிக்கையை இந்த இடிபாடு மாநில, ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
இந்தப் பாதை அமைப்பதால் 26கி.மீ தூரம் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதற்கான முன் தயாரிப்புகள், உறுதிப்பாடுகள், ஒப்புதல் பெறுதல் எல்லாம் முறையாகப் பெறப் பட்டதா என்பது பற்றி இனிமேல் தான் தெரிய வரும். ஏற்கெனவே ஜோஷிமட் நிலச்சரிவு கார்ப்பரேட் நிறுவனங்களின் அளவற்ற ஆசைக்கு ஓர் குட்டு வைத்தது இரட்டை இன்ஜின் ஆட்சியாளர்களுக்கு மறந்து போயி ருக்கக் கூடும். அல்லது அவை அலட்சியப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் திட்டம் தொடங்கும் முன் அந்த இடத்தின், மண்ணின், மலையின் உறுதித் தன்மை, எந்திரச் செயல்பாடுகளை தாங்கும் திறன் போன்றவை பற்றி மண்ணியல் துறை, சுற்றுச்சூழல் துறை போன்றவற்றின் தடையிலாச் சான்றுகள் பெறப்பட்டதா என்பது பற்றியும் ஐயம் உள்ளது.
தற்போது உடனடியாக மீட்புப் பணியில் நிபு ணத்துவமுடைய வெளிநாட்டு உதவிகளைக் கூட நாடலாம். ஏனெனில் நாற்பது உயிர்கள் நாட்டுக்கு முக்கியம். மீட்பதற்காகத் துளையிட வேண்டிய தூரமும் காலமும் சுரங்கத்தின் உள்ளேயிருக்கும் ஆக்சிஜன் அளவும் பொருந்திப் போகாத நிலையே உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி நடக்க வேண்டும். நாற்பது உயிர்களும் நலமுடன் மீட்கப்பட வேண்டும்.