headlines

img

செங்கொடி மட்டுமே நம்பிக்கை

“அவர்கள் எங்களுக்காக போராடவில்லை என்றால் எங்களது கிராமம் அன்றைக்கே அழிந்து போயிருக்கும்”. 

- கண்களில் நீர் கசிய வாச்சாத்தி கிராமத்து பெண்கள் உணர்ச்சிப் பெருக்கோடு கூறும் இந்த வார்த்தைகளுக்கு, இந்த நேசத்திற்கு, சொந்தக் காரர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், அதன் தலைவர்க ளும் வாச்சாத்திமக்களுக்கான போராட்டத்தில் 30 ஆண்டு காலம்விடாப்பிடியாக இருந்த ஒட்டு மொத்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுமே ஆவர்.

வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்ற வாளிகளே என, தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். அநேகமாக இந்தியாவில் ஒரே வழக்கில் இத்தனை பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கு மட்டுமே எனக் கூற முடியும்.

1992இல் நடந்த அந்தக் கொடிய சம்பவம் தெரிய வந்தவுடனே முதலில் தலையிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.அண்ணாமலையும் ஆவர். அதைத் தொடர்ந்து கட்சியின் அன்றைய மாநிலச் செய லாளர் ஏ.நல்லசிவன் நேரடியாகச் சென்று, வாச்சாத்தி பயங்கரத்தின் உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தார்.

கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மும் 19 ஆண்டு காலம் உறுதியாக, விடாப்பிடி யாக இந்த வழக்கை நடத்தின. எத்தனை எத்தனை தடைகள்; எத்தனை அடக்குமுறை கள்; சாட்சியங்களை கலைக்க எத்தனை முயற்சி கள்... அத்தனையும் தீரத்துடன் எதிர்கொண்டு, வாச்சாத்தி கிராமத்தின் மக்கள், குறிப்பாக பெண்கள் உறுதியாக நின்றார்கள். அவர்களின் ஒரே நம்பிக்கையாக விளங்கியது செங்கொடி மட்டுமே.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு ஒருபுறம் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அதே வேளையில், அவர்களது வாழ் வாதாரத்திற்கு தமிழக உழைக்கும் வர்க்கம் நிதி திரட்டியும், பொருள் திரட்டியும் உதவிகளைச் செய்தது. சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் வாச்சாத்தி மக்க ளுக்கு நீதி கேட்டு பிரச்சாரம் செய்ததோடு சக தொழிலாளர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் திரட்டி 207 குடும்பங்களுக்கு பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக வாங்கிக்கொடுத்தன. அன்றைக்கு 30 ஆயிரம் ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை ஆகும். 

அதேபோல ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவ ராமன் ஆகியோர், தோழர் ஏ.நல்லசிவனுடன்  வாச்சாத்தி கிராமத்திற்கு சென்று மக்களை சந் தித்ததோடு, தொடர் போராட்டமும் நடத்தினர்.

இத்தகைய வலுவான, நீண்ட போராட் டத்தின் மகத்தான வெற்றியே இது.