சவால் அல்ல, வெற்றுச் சவடால்!
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா தேர்தல் ஆணையத்துக்காக ஆஜராகி பலவிதமான விளக்கம் அளித்திருக்கிறார். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தங்க ளுக்காக, தங்களின் நடுநிலை பிறழ்ந்து செயல்படும் ‘முகமைக்கு’ அவர்கள் ஆதரவாகப் பேசவில்லை என்றால் அதனை வேறு யார் செய்வார்கள்?
ராகுல் காந்தியைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள புகார்களுக்கு தலை மைத் தேர்தல் ஆணையர் தனது செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பதிலளித்துள்ளார் என்று கூறும் சம்பித் பாத்ரா, ஆனால் சதி நடந்துள்ள தாகக் கூச்சலிடுகின்றன என்று அங்கலாய்க்கி றார். அதுமட்டுமின்றி இந்தியாவில் கலகம் போன்ற சூழல் உருவாகி தாங்கள் அரசியல் ரீதி யாக ஆதாரம் பெற வேண்டுமென்று எதிர்க்கட்சி கள் விரும்புகின்றன என்று புலம்புகிறார்.
‘தான் திருடி பிறரை நம்பான்’ என்றொரு பழ மொழி உண்டு. கலகச் சூழலை உருவாக்குவதும் அதனால் அரசியல் லாபம் பெறுவதும் சம்பித் பாத்ராவின் பாஜக பரிவாரங்கள் தான் என்பது நாடறிந்ததுதானே. அதனால் தான் அவரது உள்ளத்தில் இருப்பது உதட்டிலிருந்து வார்த்தை யாக உதிர்ந்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவசர நிலையை எதிர்த்த போராட்டம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மூலம் பீகாரிலிருந்து தான் துவங்கியது. அதுபோல் தற்போதைய மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை எதிர்த்த புயல் பீகாரில் மையம் கொண்டுள்ளது. அந்த பயம் தான் பாத்ராவுக்கு.
தன் மீதான புகார்களுக்கு தேர்தல் ஆணை யம் விரிவான பதிலளித்துள்ளதாக பாத்ரா கூறி னாலும், மகாதேவபுரா மோசடி உள்ளிட்ட குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய எந்த பதி லையும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அளிக்கவில்லை என்பது மட்டு மல்ல, விளக்கம் கூடக் கூறவில்லை. ஆனால் புதிது புதிதாக புகார்கள் வரிசை கட்டுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தே கம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநி லங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாத்ரா சவால் விடுத்திருக்கிறார். ஆனால் தவ றான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படை யில் நடத்தப்பட்டதால் மக்களவையைக் கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை களுக்கு ஆதரவு பெருகுவதால் ஆத்திரம டைந்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
உண்மையில் மக்களவையையும் மாநில சட்டப் பேரவைகளையும் கலைத்துவிட்டு தேர்த லைச் சந்திப்போம் என்றல்லவா சவால் விட்டி ருக்க வேண்டும். அதற்குரிய தைரியமும் துணிச்ச லும் அவருக்கு இல்லை. ஏனெனில் 400 தொகுதி களை கைப்பற்றுவோம் என்று கூறியவர்கள் 240 தொகுதிகளையே வென்று தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனநிலையில் அவரால் துணிச்சலாக எப்படிப் பேச முடியும்? அதுதான் பாத்ராவின் இந்த வெற்றுச் சவடால்!