headlines

img

ஜனநாயகம் காத்த தென்கொரிய மக்கள்

தென்கொரியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கரும் அத்தியாயம் மீண்டும் துவங்குமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், மகத்தான மக்கள் எழுச்சி அதை முறியடித்துள்ளது. ஜனாதிபதி யூன்  சுக் யோல் – இன் சர்வாதிகாரப் போக்கு, நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையே அசைக்கும் அபாய கரமான நிலையை உருவாக்கியது.

1980களில் இராணுவ சர்வாதிகாரத்தின் கொடூ ரங்களை அனுபவித்த தென்கொரிய மக்கள், மீண்டும் அதே வன்முறை காலகட்டத்திற்கு திரும்ப விரும்பவில்லை. ஆனால் யூன்னின் சமீபத்திய நடவடிக்கைகள், அந்த இருண்ட காலத்தின் நினைவுகளை மீட்டெடுக்கின்றன.

யூன் ஆட்சி, தொடக்கம் முதலே சர்ச்சை கள் நிறைந்ததாக இருந்தது. 2022ல் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இவர் வென்றார். ஹலோ வீன் கூட்ட நெரிசலில் 159 பேர் உயிரிழந்த சோகம், மருத்துவர்களின் வேலைநிறுத்தம், அவரது மனைவியின் ஊழல் விவகாரம் என தொடர்ச்சி யான சர்ச்சைகள் அவரது ஆட்சியை உலுக்கின. 

20% ஆக சரிந்த மக்கள் ஆதரவு, நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, வீட்டு வசதி நெருக்கடி, வேலையின்மை என பல்வேறு பிரச்ச னைகளால் சூழப்பட்ட நிலையில், ஜனநாயக வழிமுறைகளை கையாளாமல் இராணுவ சட்டத்தை அவர் அராஜகமான முறையில் பிறப் பித்தது கண்டனத்துக்குரியது. நாடாளுமன்றம் 190-0 என்ற வாக்கு விகிதத்தில் இந்த முடிவை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி எடுக்கப்பட்ட இந்த முடிவு,  யூன்னின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.

ஆனால், மக்கள் எழுச்சியின் முன் அவர் பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சம்பவம், உலகெங்கும் முதலாளித்துவ ஆட்சியா ளர்கள் எதேச்சதிகாரப்  போக்கை கையாளும் போது,  ஒன்றுபட்ட மக்கள் சக்தியால் மட்டுமே  அதனை முறியடிக்க முடியும் என்ற படிப்பி னையை நமக்கு தருகிறது.

யூன் பதவி விலக வேண்டும் என்பது மட்டு மல்ல, தென்கொரியாவில் உண்மையான மக்க ளாட்சி அமைய வேண்டும். அதற்கு தொழிலாளி வர்க்கம் தலைமையிலான மக்கள் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும். அதுவே இன்றைய வர லாற்றுத் தேவை. தென்கொரியா தனது வர லாற்றில் பல போராட்டங்களைக் கடந்து தான் இன்றைய ஜனநாயகத்தை பெற்றது. அந்த ஜன நாயக விழுமியங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தலைவரின் கடமை.

எனவே யூன் உடனடியாக பதவி விலகி, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வழிவகுக்க வேண் டும். இல்லையெனில் நாடாளுமன்ற பெரும்பான்மை யுடன் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

வட கொரியாவை எதிரியாக காட்டி, அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி வைத்து  இராணுவ பலத்தை அதிகரிப்பதே யூனின் வெளி யுறவுக் கொள்கையாக இருந்தது. ஆனால் கொரிய மக்கள் இனி யுத்த வெறியர்களின் சதிக ளுக்கு பலியாக மாட்டார்கள். அமைதி, சமத்து வம், சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய கொரியாவை உருவாக்குவதே இன்றைய தலைமுறையின் பணி. அதற்கான விதைகள் இன்றைய மக்கள் எழுச்சியில் விதைக்கப்பட்டுள்ளன.