headlines

img

இளம் தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம்!

காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் தொழிலா ளர்களின் உறுதிமிக்க போராட்டம் தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அனைத்து முனைகளிலிருந்து வந்த நெருக்கடிகளையும் எதிர்கொண்டு உருக்கு போன்று உறுதியுடன் நின்ற  தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்த்துக்க ளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

சங்கம் அமைக்கும் உரிமை அரசியல் சாச னம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. அதனை யாரிடமும் யாசகமாக கேட்டுப் பெற வேண்டியதில்லை. இன்று நாம் அனுபவிக்கிற எட்டு மணி நேர வேலை, விடுப்பு, சிறப்புப் பயன்கள் அனைத்தும்  தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பெற்றவை. அதனை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை சாம்சங் தொழி லாளர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

நவீன தாராளமய கொள்கை அமலாக்கம் உலகம் முழுவதும் புதிய  வகையிலான சுரண்டல்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதனமே  கொள்ளை லாபம் என்ற ஒற்றை இலக்கோடு வேட்டையாடி வருகிறது. இத்தகைய சுரண்ட லும் ஒடுக்குமுறையும் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியை பன்மடங்காக்கும் என்பதுதான் வரலாறு. அதுதான் சாம்சங் இந்தியா நிறுவ னத்திலும் நடந்திருக்கிறது. 

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை யொட்டி, தொழிற்சங்கம் வந்தால் முதலீடுகள் வராது; தொழில் வளர்ச்சி இருக்காது; தொழிலா ளர்களுக்கு வேலையே இருக்காது என எப்போ தும் போல் வடிகட்டிய பொய்யை  வண்டி வண்டி யாய் இறக்கினர்.  ஆனால் கடந்த 25 ஆண்டு களில் தொழிற்சங்க போராட்டத்தால் மூடிய ஒரு தொழிற்சாலையைக் கூட காட்ட முடியவில்லை. புயலென வந்த பொய்கள் அதே வேகத்தில் மறைந்து விட்டன. ஆனால் தொழிலாளர்களின் ஒற்றுமையும் உறுதியும்  உண்மை என்ன என்ப தும் களத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடந்தாண்டு 12 மணி நேர வேலை சட்டம் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட போதும், இப்படி ஒரு சட்டம் இல்லை என்றால் முதலீடு களை ஈர்க்க முடியாது என்கிற வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தைக் கைவிட்ட பின்பும் தமிழகத்திற்கு முதலீடு வந்து கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. தொழிலாளர் உரிமைக்கு நெருக்கடி வரும்போ தெல்லாம் தமிழகத்தின் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து அதனை மீட்டிருக்கிறது என்பது தான் வரலாறு.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் போது, அதோடு இணைந்து தொழிலாளர் உரிமை களும் நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்பது தான் தமிழகத்தின் பெருமை. அந்தப் பெருமை தொடரட்டும்!