headlines

img

கவலையளிக்கும் தில்லி வன்முறை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதி களில் உறுதிமிக்க போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இந்தப் போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாமல் சீர்குலைப்பதற்கு ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் திட்டமிட்டது. ஆனாலும் சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மோடி அரசின் திட்டங்களால், பொதுமக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்ச உணர்வே இந்தப் போராட்டங்க ளுக்கு காரணம் ஆகும். 

சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழி யில் அமைதியாகப் போராடியவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். எனினும் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக தலைநகர் தில்லியில் நடந்து வரும் போராட்டம் பெண்களால் தலைமையேற்கப்படும் போராட்டமாக அமைதியான முறையில் இரண்டு மாதங்களாக நடந்து வந்தன. போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் மத்திய அமைச்சர் கள் உட்பட பாஜகவினர் பேசி வந்தனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இட மில்லை என எரியும் நெருப்பில் எண்ணெண் ணெய் ஊற்றினர். மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகங்களையும் தீர்ப்பதற்கு அவர்கள் எந்த வகையிலும் முயலவில்லை.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ‘ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு இடங்களில் போராடும் மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் பரி வாரம் காவல்துறை துணையுடன் பகிரங்கமா கவே தாக்குதல் நடத்தியது. உ.பி.’ உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபடு வோர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் தில்லியில் நடந்து வரும் வன்முறை வெறியாட்டம் கவலையளிப்பதாக உள்ளது. இந்த வன்முறைகளில் காவலர் ஒருவர் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல ரின் மரணத்திற்கு காரணமான வன்முறையா ளர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி, போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஏற்கத்தக்கதல்ல. 

கலவரத்தை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்துப் பகுதி மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்துவதும், மக்கள் ஒற்று மையை பாதுகாப்பதுமே உடனடித் தேவையாகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை பாரபட்சமின்றி செயல் படுவதும், மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்வதும் அவசியமாகும்.