headlines

img

சுகாதாரமான குடிநீரை உறுதிப்படுத்துவது அவசியம்

சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் வயிற்றுப்போக்கால் இரண்டுபேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் குழாய் மூலம் விநி யோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்த தால் இவர்கள் உயிரிழந்தார்களா என மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம் பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து  குடிநீர் சேகரிக் கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னையையொட்டிய சில பகுதிகளில் மழை நின்ற நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து நிறம் மாறிய நிலையில் வந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். புதன் கிழமை இரவு பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட் டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று அதில் சிலர் வீடு திரும்பி னர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட னர். வியாழக்கிழமை காலை பலர் இதே பாதிப்பு களால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவ மனைக்கு வரும்போதும் மற்றொருவர் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை காலையும் உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தையடுத்து மக்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்தும் வகையில் மாநில சுகாதா ரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். மருத்துவக் குழுவை அனுப்பி வீடு  வீடாக சென்று மக்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில அரசும் நிவாரணம் அறிவித்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் சென்னைக்கு அருகாமை யில் உள்ள பல நகராட்சிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது.  விநியோகிக் கப்படும் குடிநீரும் தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக விநியோகிக்கப்பட்ட குடிநீர் கடும் துர்நாற் றத்துடனும் கழிவுகள் கலந்துள்ளதையும் அறிந்த பகுதி மக்கள் சிலர் குடிநீர் வாரியத்திலும் தாம்பரம் மாநகராட்சியிலும் புகார் அளித்தபோதிலும்  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதம டைந்துள்ளன. சில இடங்களில் குடிநீர் குழாய் கள் பள்ளத்தில் உள்ளன. சாலைகளின் பல இடங்க ளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாலும் சுகாதார மற்ற நிலை உள்ளது.  

குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடு இந்த பாதிப்புகளுக்கு காரணம் என்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டை  மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தாமல் தீவிரமாக எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சென்னை மட்டுமல்ல மாநி லத்தில் பல இடங்களில் அடிக்கடி இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது நிரந்தர தீர்வு காண்பதோடு சுகாதாரமான குடிநீர் விநியோ கத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.