headlines

img

தனித்தன்மை அழிக்க வேண்டாம்

பாஜக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் அமரும் போதெல்லாம்- பெரும்பான்மையின்றியோ, பெரும்பான்மையுடனோ - 13 நாளோ, 13 மாதமோ, ஐந்து ஆண்டுகளோ, வாஜ்பாய் தலை மையிலோ, மோடி தலைமையிலோ - கல்வித் துறையில் சிறிய மாற்றங்கள் முதல் அதிரடி யான பெரிய மாற்றங்கள் வரை திணித்துக் கொண்டேயிருக்கிறது.

வாஜ்பாய் அரசில் முரளி மனோகர் ஜோஷி சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் இந்துத்துவா நடைமுறைகளைப் புகுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மோடி அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை எளிய மக்களை கல்வி வளாகங்களிலேயே நுழைய விடாமல் செய்யும் வகையிலான திட்டங்களைக் கொண்டு வந்தது.

முன்பு கல்வி மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருந்ததை அவசர நிலைக் காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ் ஆட்சி. அவசர நிலை கொண்டு வந்த தை அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று கூறிக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சி கல்வியை  மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றியிருக்கலா மல்லவா? தங்களுக்கு ஏதுவாக இருப்பதை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு சமத்து வம், மதச்சார்பின்மை என்பதை அவசர நிலைக் காலத்தில் சேர்த்ததை அரசமைப்புச் சட்டத்திலி ருந்து நீக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் சென்றனர் பாஜகவினர். ஆனால் அதை உச்சநீதி மன்றம் ஏற்கவில்லை.

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாற்றங் களைச் செய்வதற்கு முன் மாநில அரசுகளை கலந் தாலோசிக்காமல், கண்துடைப்புக்காக அதிகாரி களிடம் கருத்துக் கேட்டதாகக் கூறி தேசிய கல்விக்  கொள்கையை முறைப்படி அறிவித்து அமலாக்கா மல் ஒவ்வொரு அம்சமாகத் திணித்திடும் வேலை யில் மோடி அரசு ஈடுபட்டது. பின்னர் இந்த கொள்கையை அமல்படுத்தாவிட்டால் நிதியுதவி செய்ய மாட்டோம் என்று மிரட்டத் துவங்கியது.

நாட்டில் கல்வித்துறையில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்க ளாகவே உள்ளன. குறிப்பாகத் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என அறிவித்து மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. ஆனாலும் ஒன்றிய அரசு தனது திட்டத்தை அமலாக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது. பிஎம்ஸ்ரீநிதி மும்மொழிக் கொள்கை திட்டத்தில் கையொப்பமிட்டால் உடனடியாக நிதி வழங்கு வதாக தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். இது தமிழ் நாட்டின் மாணவர்களின் நலனைப் பாதிக்கும்.

கல்விமுறையை மாநிலங்களின் தன் மைக்கேற்ப அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்வதுதான்  இயல்பானது. ஆனால் ஒற்றைத் தன்மையைத் திணித்து பன்முகக் கல்வியை அழிப்பது கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவாது. எனவே தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.