india

img

5 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதுதில்லி,டிசம்பர்.25- ஐந்து மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார், கேரளா, மணிப்பூர், ஒடிசா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து முடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

  • பீகாரில் ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் கேரள ஆளுநராகவும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பீகார் ஆளுநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் உள்துறைச் செயலாளர் ஏ.கே.பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மிசோரம் ஆளுநராக இருந்த டாக்டர் ஹரிபாபு கம்பம்படி ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.