headlines

img

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை அழிப்பதா?

நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றபிறகு அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளின் அடித்தளத்தை அரித்து வருகிறது. ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்ப இந்த அமைப்புகள் வளைக்கப்படுகின்றன. தேர் தல் ஆணையம் மோடி அரசினால் தொடர்ந்து கீழிறக்கம் செய்யப்படுகிறது. 

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்போது, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் ஆலோ சனையைப் பெற வேண்டும் என்று இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதி பதியை இந்தக் குழுவிலிருந்து மோடி அரசு நீக்கி யது. எதிர்க்கட்சித் தலைவரிடமும் கூட முறை யான ஆலோசனை பெறுவதில்லை. வெறும் தகவல் மட்டுமே சொல்லப்படுகிறது. 

தற்போது தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் மேலும் ஒரு சட்டத்திருத்தத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் உள்ள முக்கிய ஆவணங்களை பொது வெளி யில் பகிரக்கூடாது என்பது இந்த சட்டத்திருத் தத்தின் சாராம்சமாகும்.

ஹரியானா சட்டப் பேரவை தேர்தல் தொ டர்பாக பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வீடியோ பதிவுகள், வாக்குப்பதிவு குறித்த ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் முக்கிய ஆவணங்களை பொதுவெளியில் பகிர தடை விதிக்கும் வகையில் தேர்தல் ஆணைய சட்ட விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள் ளது. ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செய்யப்படும் தில்லுமுல்லுகளை மூடி மறைக்கும் நோக்கத்துடனேயே இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவு.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பெரு மளவு மோசடி நடந்துள்ளதாக சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலைத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்தி டம் உள்ள ஆவணங்களை பகிர தடை விதித்து ஒன்றிய அரசு விதிகளை திருத்தியுள்ளது.

உயர்நீதிமன்றம் ஆவணங்களைத் தர உத்தரவிட்ட நிலையில் இத்தகைய திருத்தம்கொண்டு வரப்பட்டுள்ளது உள்நோக்கமுடையது. 

தேர்தல் ஆணையர்களாக தங்களுக்கு ஏதுவானவர்களை நியமிக்கும் போக்கு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிப்படையான, நம்பகமான, சுயேச்சையான தேர்தல் நடைபெறாதபோது நீதிமன்றத்தை நாடு வதுதான் ஒரே வழியாக உள்ளது. மோடி அரசு செய்துள்ள சட்டவிதி திருத்தம் அதற்கான வாச லையும் அடைப்பதாக உள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து இதனை எதிர்க்க வேண்டும்.