நாகப்பட்டினம், டிச. 24 - ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டத்தில் 1968 டிசம்பர் 25 அன்று ஏற்றிய செங்கொடி யை இறக்காத காரணத் திற்காகவும், அரைப்படி கூலி உயர்வு உள்ளிட்ட உரி மைகளுக்காகவும் போரா டிய 44 விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பண்ணை யார்களால் ஒரே குடிசைக்குள் உயிரோடு தீயிட்டு கொளுத்தப்பட்டனர்.
அதன் 56-ஆவது ஆண்டு நினைவு தின- வீரவணக்க நிகழ்வு கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் புதனன்று காலை 10 மணியளவில் துவங்குகிறது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வ சிங், கே. பாலபாரதி, சிஐடியு பொதுச் செயலாளர் கே. சுகு மாரன், மூத்த தலைவர் என். சீனிவாசன், வி.பி. நாகை மாலி எம்எல்ஏ, நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, சிபிஐ சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், சிபிஐ தேசியக் குழு உறுப்பி னர் கோ. பழனிச்சாமி மற்றும் விவ சாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் பங்கேற்று தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றுகின்றனர்.புதுவை சப்தர் ஹஷ்மியின் கலை நிகழ்ச்சி நடைபெறு கிறது. தியாகிகளை நினைவுகூறும் வகையில் சிஐடியு சார்பில் நெல் தானம், அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.