headlines

img

திசை காட்டியது மதுரை மாநாடு

திசை காட்டியது மதுரை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் 24ஆவது அகில இந்திய மாநாட்டினை வெற்றிகர மாகவும், பேரெழுச்சியுடனும் நடத்தியதன் மூலம், இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் அழியாத தடத்தை மூன்றாம் முறையாக பதித்திருக்கிறது மதுரை மாநகரம்.

அனைத்து அம்சங்களிலும், அரசியல் இயக் கங்களுக்கு வழிகாட்டியாக இந்த மாநாடு நடை பெற்றது என்று சொன்னால் மிகையல்ல. பிளாஸ் டிக் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் குப்பை இல்லாத; மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும் நிறைந்த; தொழி லாளர் வர்க்கத்தின் விடுதலையை மட்டுமே நெஞ்சில் ஏந்திய - வேறு எந்த சிந்தனையும் இல்லாத - பாட்டாளி வர்க்க வீரர்களாய் புடம் போடப்பட்ட பிரதிநிதிகளின் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இடம் பெற்ற; ஒரு முதலமைச்சர், பல அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தலைவர்கள் கூட எவ்வித படாடோப மும் இன்றி சக தோழர்களாக பங்கேற்ற; பிரதி நிதிகள் எண்ணிக்கைக்கு இணையாக மாநாட்டுப் பணிகளை இரவு  பகலாக நிறைவேற்றிய பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உழைப்பை அர்ப்பணித்த... என ஏராளமான சிறப்புகளை ஒருங்கே வெளிப்படுத்தியது இந்த மாபெரும் மாநாடு.

மாநாட்டின் அரசியல் அறைகூவல்கள், செறிவு மிக்க தீர்மானங்கள் மூலம் வெளிப்பட்டன. கொடிய தொழிலாளர் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக இந்திய பாட்டாளி வர்க்கம் மே 20 அன்று நடத்தவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத் தத்தை வெற்றி பெறச் செய்வோம் என்பதே மாநாட்டின் முதல் தீர்மானம்.

ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான சங்பரிவாரத்தின் மிகக் கொடூரமான மதவெறித் தாக்குதல்களையும், இந்துத்துவா கருத்தியல் பிரச் சாரத்தையும் வலுவான முறையில் எதிர்கொள் வோம்; முறியடிப்போம் என்பது மாநாட்டின் மற்று மொரு முதன்மைத் தீர்மானம்.

ஒன்றிய மோடி அரசு மதவெறி - கார்ப்பரேட் கூட்டணியின் முகமாக செயல்பட்டு வருகிறது. ஹிட்லரின் காலத்தில் உருவான பாசிசம், முத லாளித்துவத்தின் அன்றைய உச்ச வடிவமான ஒரு குறிப்பிட்ட தேசத்தின் நிதி மூலதனத் தின் உச்சகட்ட லாப வேட்கையின் விளைவால் எழுந்த நெருக்கடியின் பின்னணியில் உருவான  கொடூர அரசியல் வடிவமாகும். அதன் நவீன வடி வம் வேறு பல முகங்களோடும் தற்போது எழுந்துள் ளது; ஆனால் இது தற்போதைய முதலாளித்து வத்தின் இயக்கு சக்தியான சர்வதேச நிதி மூல தனத்தின் உச்சகட்ட லாப வேட்கையின் விளை வால் எழுந்துள்ள - முதலாளித்துவத்தால் தீர்க்க முடியாத நெருக்கடியின் பின்னணியில் உலகளா விய முறையில் எழுந்துள்ள - கொடிய அரசியல் வடிவமாகும்; நவ பாசிசம் எனும் - பன்முனைத் தாக்குதலாக தீவிரமடையவுள்ள இந்த வடி வத்தின் போக்குகள் மோடி ஆட்சியின் கீழ் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன என்பதை மாநாடு உறுதி செய்துள்ளது. என்ன விலை கொடுத்தேனும் நவ பாசிசம் எழுவதை தடுத்து நிறுத்துவோம் என்பதே மதுரை மாநாட்டின் தீர்மா னம். இந்திய பாட்டாளி வர்க்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் இந்த தீர்மானத் தின் திசை வழியில் செல்லட்டும்!