தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழக மக்களில் பெரும்பாலோர் சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது. அந்த பேருந்துகளில் இடவசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கிறார்கள். அக். 23 அன்று வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட, அக். 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டி கைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி யுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து சேலத் திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை செல்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது. இது 214 சதவீதம் அதிகமாகும். சென்னையில் இருந்து மதுரைக்கு விமா னத்தில் செல்ல கட்டணம் ரூ.2728 மட்டுமே. அரசு பேருந்தில் செல்ல கட்டணம் ரூ.450. ஆனால் தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் ரூ.850 முதல் ரூ.1200 வரை வசூலிக்கிறார்கள். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த பட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.2200 வரை வசூலிக்கிறார்கள். ஏசிபடுக்கை வசதி உள்ள பேருந் தில் ரூ.3ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது. பகிரங்க கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. இந்த கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியா ளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப் பதை அறிந்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அதிமுக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளை எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்கு முறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்க ளது விருப்பம் போல் இயக்கி வருகிறார்கள். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகை யை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்கு வதாக கூறப்படுகிறது. மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவது ஒரு அரசின் கடமை. எனவே உடனடி யாக ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும்.தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு மாநி லங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இயக் குவதற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகள் வசூலிக்கின்ற கட்டணத்தை யும் முறைப்படுத்தவேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் என்று வாய்ச்சவடால் விடாமல் செயலில் காட்ட வேண்டும்.