headlines

img

மாணவர்களுக்கு  யார் பொறுப்பு?

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம்பெற்றே செயல்படவேண்டும்.  தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படக்கூடாது என அனைத்துப்பள்ளிகளுக்கும் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து தடையின்மைச் சான்றுமற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டு வந்தபள்ளிகளுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணைகளை வழங்கினர். தடையின்மைச் சான்று மற்றும்அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்புஉறுதி செய்யப்படவில்லை என்பதால் அப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்றுபெற்றோர்களுக்கு மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.சென்னை புறநகரில் மட்டும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள் உள்பட 25 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை. மாநிலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 709 பள்ளிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளில் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை இப்பள்ளி மாணவர்கள் எழுத இயலாது.அங்கீகாரம் இல்லாத பள்ளி என்றால், பள்ளிகளின் முகப்பில் இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றிசெயல்படும் பள்ளி என்ற தகவலை ஒட்ட வேண்டும்.

அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறும் வட்டாரக் கல்விஅலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் மாவட்ட கல்விஅலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.இது வரவேற்கத்தக்கது என்றாலும் நிர்வாகத்தின் கவனக்குறைவுக்காக அப்பள்ளிகளில்பயிலும் மாணவர்களை பழிவாங்கக்கூடாது. அரசால்நடத்தமுடியும் என்றால் அந்த பள்ளிகளைஅரசே நடத்த முன்வரவேண்டும். சிபிஎஸ்இபள்ளிகளும் இதில் உள்ளதால் எவ்வளவு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசுவெளிப்படையாக அறிவிக்கவேண்டும். வேறுபள்ளிகளில் சேரவேண்டும் என்றால் அம்மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவை, அதனைஇந்த பள்ளிகள் வழங்கினால் செல்லாது என்பதால் அரசு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும், பாதிக்கப்படும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இதற்காக மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கு கலந்தாய்வு நடத்த மாவட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அங்கீகாரமற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்தவேண்டும்.