headlines

img

வலதுசாரிகளின் வலை அறுத்தெறியப்படும்!

வலதுசாரிகளின் வலை அறுத்தெறியப்படும்!

நவீன தாராளமயமாக்கல் கொள்கையை உலகின் பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்த துவங்கியதைத் தொடர்ந்து மக்களுடைய வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு அதிருப்திக்கு ஆளாகி வரு கின்றனர். இடதுசாரி சக்திகள் வலுவாக இல்லாத  இடங்களில் மக்களின் இந்த அதிருப்தியை வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்கின்றனர்.

வலதுசாரி அரசுகள் பின்பற்றும் கொள்கைக ளால் பாதிக்கப்படும் மக்களின் கோபத்தை கடைந் தெடுத்த வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்கின் றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிப் பிட்டுள்ளது.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனியின் பேச்சு இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள் ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கன்சர்வேட்டிவ் அரசியல் நடவடிக்கை மாநாட் டில் காணொலி மூலமாக பேசிய ஜார்ஜியோ மெலோனி, அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப், அர் ஜெண்டினா அதிபர் மிலே, இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி ஆகியோரும் தானும் பேசினால் இடதுசாரிக ளுக்கு கோபம் வருகிறது என்று கூறியுள்ளார்.

ஐரோப்பா கண்டம் முழுவதும் வலதுசாரி தலை வர்களின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது என்றும் மெலோனி பெருமைப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு எத்தகைய அடாவடித் தனமான கொள்கைகளை பின்பற்றி வருகிறார் என்பதை உலகம் அறியும். இந்தப் பட்டியலில் பிரத மர் நரேந்திர மோடியையும், மெலோனி இணைத் துக் கொண்டிருப்பதிலிருந்தே மோடியின் அரசை நவீன பாசிச குணாம்சங்களை கொண்ட அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதன் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இத்தாலி யில் ஜார்ஜியோ மெலோனியின் வழிகாட்டியான முசோலினி ஆட்சிக் காலத்தில் அந்த நாட்டில் ஜனநாயகம் என்ன பாடுபட்டது என்பதை எல் லோரும் அறிவார்கள். ஜெர்மனியின் ஹிட்ல ரும், முசோலினியும் சேர்ந்து கொண்டு தங்களது நாட்டு மக்களை மட்டுமல்ல, மனிதகுலத்தின் இருத்தலையே மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கினார்கள்.

இன்றைக்கு மெலோனியினால் வசைபாடப் படும் இடதுசாரிகள்தான் பாசிச பேராபாயத்திலி ருந்து பூவுலகை பாதுகாத்தனர். குறிப்பாக அன்றை க்கு இருந்த சோவியத் யூனியன் இந்தப் பணி யில் மகத்தான பங்காற்றியது.  

இன்றைக்கு உலக மக்கள் அனுபவித்துக் கொண் டிருக்கும் பல்வேறு உரிமைகளும், ஜனநாயக மாண்புகளும் பாசிசத்திற்கு எதிரான போரினால் உருவானவைதான். ஆனால் இன்றைக்கு கடைந்தெடுத்த வலதுசாரிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்களால் பரப்பப்படுவது மனிதத் தன்மையற்ற  வெறுப்பரசியலே ஆகும். தொழி லாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் வலது சாரி அரசியலை துடைத்தெறியும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.