அது அழியாச் சித்தாந்தம்!
நாட்டில் எங்கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் இருந்தார்களோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் கொண்டு வர முடியவில்லை என்று வளர்ச்சி நாயகன் (விகாஸ் புருஷ்) என்று படம் காட்டப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி யின் வலக்கரம் அமித் ஷா ஞாயிறன்று அலர் தூற்றியிருக்கிறார், ஏதோ இவர்களது கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் வளர்ச்சி பொங்கி வழிவது போல.
பாஜக ஆளும் மாநிலங்களின் பின்தங்கிய நிலை குறித்த விவாதங்கள் பெரும்பாலும் தொ டர்ச்சியான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு களையே காட்டுகின்றன என்று ஆக்ஸ்பாம் இந்தியாவின் அறிக்கை குறிப்பிடுகிறது. நாட்டின் செல்வத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 5 சதவீத மக்களிடமே உள்ளது என்றும் அது சம மாக விநியோகிக்கப்படவில்லை என்றும் அது மேலும் குட்டு வைக்கிறது.
ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா- கார்ப்பரேட் கூட்டின் விளைவாக அவர்களது நெருங்கிய நட்பு வட்ட முதலாளிகளான அம்பானியும் அதா னியும் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்ததையும் நாட்டின் அனைத்து வளங்க ளையும் அனைத்துத் துறைகளையும் அவர்க ளுக்குத் தாரை வார்ப்பதையுமே வளர்ச்சி என்று அமித் ஷா கூறுகிறார்.
இவர்களது கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லாம் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, உண வுப் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் மிக மிகப் பின்தங்கியே இருக்கின்றன என்பதை புள்ளி விவரங்கள் மற்றும் திட்டஅமலாக்கல் அமைச்சகத் தகவல்களே அம்பலப்படுத்து கின்றன. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கம்யூ னிஸ்ட்டுகள் ஆளும் கேரளா முதலிடத்தில் உள்ளது. வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு ஆகிய வற்றில் தமிழ்நாடும் கேரளாவும் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
மதநல்லிணக்கத்திற்கு கேரளா புறக்காவல் நிலையம் என்று புகழப்படுகிறது. மதவெறி வன் முறைகள், வழக்குகளில் முதலிடத்திலும் தொடர்ந்த இடங்களிலும் உ.பி., தில்லி, மணிப்பூர், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிராவும் தானே இருக்கின்றன. பாஜக ஆளும் 8 மாநி லங்களில் 85 சதவீத வழக்குகள் பதிவாகியுள் ளன. இவரோ கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து நாடு விரைந்து விடுபட வேண்டும் என்று கூவுகிறார்.
அழிவுச் சித்தாந்தம் இந்துத்துவா - வரு ணாச்சிரம, சனாதன - மநுஅதர்மம் தான். அது தான் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது. சமத்துவ சிந்தனையை சிதைக்கிறது. சாதி, மத வேறுபாடுகளை வளர்க்கிறது. சாதி நூறு சொல்லுவாய் போ போ என்றார் மகாகவி பாரதி. “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக் கும் பொது உடமை/ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை” என்ற பாரதியின் கனவு தான் இந்திய நாட்டுக்குத் தேவை. சமத்துவ சிந்த னையும் கம்யூனிச சித்தாந்தமும் மேலும் மேலும் பரவும். அதுவே காலத்தின் பெரு விருப்பம். அமித் ஷாவின் கனவு நிறைவேறாது!
