பொருளாதார நெருக்கடியின் ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை, நவதாராளவாத கொள்கைகளின் தோல்வியை யும், மோடி அரசின் மக்கள் விரோத போக்கை யும் அம்பலப்படுத்துகிறது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் வெறும் 5.4 சதவீதமாக சரிந்திருப்பது, கடந்த ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோச மான நிலையைக் காட்டுகிறது. 2023-ன் முதல் காலாண்டில் 8.2 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 8.6 சதவீதமாகவும் இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது பெருமளவில் சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த 7.2 சதவீத வளர்ச்சி இலக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது. உற்பத்தித் துறையிலும், பிற துறைகளிலும் ஏற் பட்டுள்ள தேக்க நிலை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலைக்குறியீடு (CPI) அடிப்படையி லான பணவீக்கம் 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம். ஏப்ரல் மாதத்தில் 4.83 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீதத்தை மீறியுள்ளது. அத்தியா வசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நெருக்கடி நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் வட்டி விகி தத்தை குறைக்க வேண்டும் என்று கோருகிறார் கள். உணவுப் பொருட்களின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ள அரசு, வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் பெரு முதலாளிகளுக்கு சலுகை வழங்க முயல்கிறது.
ஜிஎஸ்டி என்ற பெயரில் சிறு வணிகர்களை நசுக்கும் கொள்கையும், வெளிநாட்டு முதலீட்டா ளர்களின் (FPI) கட்டுப்பாடற்ற பண வெளியேற்ற மும் பணப் புழக்கத்தை கடுமையாக பாதித்துள் ளது. வங்கி அமைப்பில் ₹9,489 கோடி பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நெருக்கடி தற்செயலான நிகழ்வல்ல. இது மோடி அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளின் இயல்பான விளைவு. மக்கள் நலனை முன்னிறுத்தும் மாற்று பொரு ளாதார கொள்கைகளே இந்த நெருக்கடிக்கான நிரந்தர தீர்வு. உழைக்கும் மக்களின் ஒற்றுமை யும், உறுதியான போராட்டமுமே இந்த மாற்றத்தை சாத்தியமாக்கும்.
மக்கள் நலனை முன்னிறுத்தும் மாற்று அரசியல்-பொருளாதார அமைப்பே இந்தியா வின் எதிர்காலத்திற்கான ஒரே நம்பிக்கை.