உங்களால் மறைக்க முடியாது!
மகாத்மா காந்தியின் போதனைகள் தற் காலத்துக்கு மிகவும் அவசியம் என்று ஜெர்மனி அதிபர் பிரடெரிக் மெர்ஸ் கூறியுள்ளார். இந்தியா வுக்கு திங்களன்று வருகை தந்து சபர்மதி ஆசி ரமத்திற்கு சென்று பார்வையிட்ட பின் அங்குள்ள பதிவேட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட நபரின் கண்ணி யத்தைப் பாதுகாக்க மகாத்மா காந்தி நடத்திய அகிம்சைப் போராட்டங்கள் இன்றளவும் நம்மை ஈர்க்கிறது என்று கூறியுள்ளது மிகவும் பொருள் பொதிந்ததாகும்.
உலக நாடுகள் பலவும் இந்தியா என்றால் காந்தியின் தேசமாகவே பார்க்கிறார்கள் என்ப தும் அவர் இந்து மத வெறியன் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட போது தந்தை பெரியார் தனது பத்திரிகையில் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்று புகழ்ந்து ரைத்தார் என்பதும் பொருத்தமானதாகவே இருந்தது. அதனால்தான் அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டார்.
ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று இந்து- முஸ்லிம் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்ததற்கா கவே கொடியவன் கோட்சேயால் மண்ணில் சாய்க்கப்பட்டார் காந்தி. ஆனால் அவரது கொள் கையும் புகழும் மேலும் மேலும் வளர்ந்த வண் ணமே இருக்கிறது. அதனால் தான் இன்றைய ஒன்றிய பாஜக ஆட்சி மிகவும் கபடத்தனமாக அவரது பெயரில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தையே ஒழித்து விட்டது
அதற்குப் பதிலாக விபி ஜி ராம்ஜி என்று புதிய திட்டத்தை தடாலடியாக கொண்டு வந்திருக்கி றது. ஆனாலும் அவர்கள் அழிக்க நினைக்கும் காந்தியின் பெயர் மீண்டும் மீண்டும் இந்திய நாட்டு மக்களால் மட்டுமல்லாது வெளிநாட்டு மக்களாலும் ஓங்கி ஒலிக்கவே செய்யும் என்ப தையே ஜெர்மனியின் அதிபர் பிரடெரிக் மெர்ஸ்-இன் குறிப்பு நாட்டுக்கும் நரேந்திர மோடி அரசுக்கும் உணர்த்துகிறது.
காந்தியின் ஆசிரமத்திலிருந்து சபர்மதி நதிக்கரைக்குச் சென்று ஜெர்மனி அதிபருடன் பிரதமர் மோடி சர்வதேச காற்றாடித் திரு விழாவை தொடங்கி வைத்திருக்கிறார். சபர்மதி ஆசிரமத்தின் நினைவுகளையும் காந்தியின் கொள்கை விழுமியங்களையும் மத நல்லி ணக்கத்தையும் சேர்த்தே காற்றில் பறக்க விட்டி ருக்கிறார் மோடி என்றே தோன்றுகிறது.
காந்தி என்றதும் சபர்மதி ஆசிரமம், அகிம் சைக் கொள்கைகள் நினைவுக்கு வருவது போலவே மோடி என்றதும் குஜராத் கலவரங்க ளும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் கொடூரமாக வேட்டையாடப்பட்டதும் நினைவுக்கு வருவ தைத் தவிர்க்க முடியாதே. ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் காந்தியின் கொள்கைகளையும் புகழையும் அவர்களால் அழிக்க முடியாது. மீண்டும் மீண்டும் மேலெழுந்து கொண்டே இருக்கும். தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து!
புத்தரின் போதனைகள் வருணாசிரம சனாதன இந்து மதத்தால் மறைக்கப்பட்டதாக நினைத்தாலும் அவை மறையாமல் இருப்பது போலவே காந்தியின் பெயரும் இந்திய வர லாற்றில் என்றும் நிலைத்திருக்கும்!
